Tamil Poem: பனித்துளி!
Jul 14, 2026,01:03 PM IST
- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்
வெண்
முத்துக்களாய்
உடல் முழுதும்
பனித் துளிகளை
மலரச்
செய்கின்றன
கடும் பனிக்
காலத்தில்
போர்வைப்
போர்த்திக்
கொள்ளாத
புல் வெளிகள்.
பனி முத்துக்களை
மேனி எங்கும்
அணிந்து கொண்ட
மலர்களின்
அழகை
கதிரவன் வந்து களவாடும்
முன்
படம் பிடித்து
வைத்துக்
கொள்வோம்,
காலங்கள் கடந்தும்
ரசிப்பதற்கு.