குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

Meenakshi
Apr 11, 2025,01:27 PM IST

சென்னை: குமரி அனந்தன் மறைவையொட்டி பாஜக மூத்த தலைவர் தமிழிசையை நேரில் சந்தித்து அவருக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா ஆறுதல் கூறியுள்ளார்.


2026ம் ஆண்டிற்கான சட்டசபை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தங்களது பணிகளில் வேகம் காட்டி வருகிறது. இந்நிலையில் வருகிற 2026ம் ஆண்டில் எப்படியாவது தமிழ்நாட்டில் கால் பதித்து விட வேண்டும் என்று பாஜக தலைமை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இன்னும் ஓர் ஆண்டு காலம் உள்ள நிலையில், தற்பொழுதே பாஜக கூட்டணி குறித்து தீவிரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இது குறித்து பேச்சு வார்த்தை நடத்துவதற்காகவும், பாஜக தமிழக தலைவர் மாற்றம் குறித்து முடிவு செய்வதற்காகவும் நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை வந்தார்.




இரவு முழுவதும் ஆலோசனை மேற்கொண்ட அமித்ஷா, இன்னும் சற்று நேரத்தில் நடைபெற உள்ள செய்தியாளர்கள் சந்திப்பில் கூட்டணி குறித்து அறிவிக்க இருக்கிறார். இதற்கு முன்னர் கிண்டியில் அமித்ஷா தங்கயிருந்த ஓட்டலில் இருந்து சாலிகிராமத்தில் உள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இல்லத்திற்கு அமித்ஷா நேரில் சென்றார்.


தமிழிசையை நேரில் சந்தித்தார். தமிழிசையின் தந்தை குமரி அனந்தன் மறைவையொட்டி தமிழிசைக்கு நேரில் ஆறுதல் தெரிவித்தார்.  அமித்ஷாவுடன் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.