அன்பின் ஊற்றுக்கண்- அகிலம் காக்கும் தாய்மை
அண்டம் புவனம், என்று இங்கே கொட்டிக்கிடக்கும் அதிசயங்களின் நடுவில் எதுவும் நிரந்தரம் இல்லை.
இருந்தும் தியாகம், அரவணைப்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, கண்டிப்பு என்ற பஞ்ச உணர்வுகளும் ஓர் சக்தியாய் இயங்கி இப்பிரபஞ்சத்தில் அந்தரங்கமாய் உலாவி மனிதம் விழுகின்ற போதெல்லாம் கைகொடுத்து மீட்பது ' அன்பு ' மட்டும்தான்.
அந்த அன்பு அளவுக்கோலே இல்லாமல் ததும்பும் ஓர் இடம் தாய்மை .
கருவுற்று சில குழந்தைகளுக்கு தாயானாலும் சரி, இல்லை கருணையுற்று பல உயிர்களுக்கு தாயானாலும் சரி, அங்கு தெரிவது கடவுளுக்கு நிகரான தாய்மை மட்டும்தான்.
பேதையாய் பிறந்து, பெதுமையாய் வளர்ந்து, மலர் போன்ற மங்கையாய், மதியுடைய மடந்தையாய், அறிவூட்டும் அன்னையாய், தெளிவூட்டும் தெரிவையாய், இன்னும் பல பொறுப்புகளுடன் எல்லாமுமாய் விளங்கும் தாய்மையை இன்று மட்டும் அல்ல என்றும் வணங்கிப் போற்றுவோம்.
என்னை ஈன்ற தாய்க்கும், அன்பு பாராட்டும் அனைத்து தாய்மைக்கும் உள்ளம் நிறைந்த அன்னையர் தின நல்வாழ்த்துகள்.