அன்பும் அறனும் அகல்விளக்காய்!
Nov 08, 2026,11:33 AM IST
- ஆனந்தி சத்தியராஜ்
அன்பும் அறனும் அகல்விளக்காய் அமைந்திட,
நல்எண்ணம் எனும் நல்லெண்ணெய் ஊற்றி,
ஊக்கத்துடன் எப்போதும் நிமிர்ந்து நிற்கும்
திரியைத் தொடுத்து,
சுடரொளியாய் இம்மண்ணில் விளக்கேற்றி,
விண்மீன்களை வரவேற்போம்!
அகத்தின் இருள் அகற்றி,
அறிவொளியைப் பெற்றிட,
இறைவனை வேண்டி,
இயற்கையையும் அரவணைத்து,
இந்த இனிய தீபத் திருநாளை
உறவுகளோடும், நப்போடும் மகிழ்ந்து கொண்டாடுவோம்!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!