அன்பளிப்பு (கவிதை)
Nov 07, 2025,04:43 PM IST
அன்பளிப்பு என்ற பெயரில்........
ஆரம்பித்த கையூட்டு எங்கும் அது .....
தாவிடுதே அச்சமின்றி நெறி கெட்டு......!
கத்தியின்றி ரத்தமின்றி......
யுத்தம் போல தொடருது.......!
நித்தம் நித்தம் சத்தமின்றி.......
நகத்தை போல வளருது......!
வளமை காணா நாட்டில் இன்னும்.....
நிலமை மோசமாகுது.....!
வேலைக்கேற்ப ஊதியமும்.......
அரசாங்கம் தருகுது......
வறியவரின் வாழ்க்கையிலே.......
வேலி பயிரை மேயுது....!
சிந்தித்து பார்த்து செய்கையை.......
மாற்றி முழுதாய் திருத்தனும் மனிதனே....!
லஞ்சம் இல்லா வாழ்வை மாற்றி.....
நலமாய் வாழனும் உலகிலே......!!
(சீர்காழியைச் சேர்ந்த மலர்விழி ராஜா, கதை, கவிதைகள், கட்டுரைகள், பக்திப் பாடல்கள் எழுதுவதில் வல்லவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார்)