சிறகை விரி.. வா சேர்ந்து பறப்போம்!
Oct 18, 2026,01:05 PM IST
- ஹர்ஷினியா
நான் கடவுளிடம் கூறியது
என்னால் காலத்தின் வேகத்தில் விளையாட முடியவில்லை என்று,
ஆனால் இப்போது தான் புரிகிறது,
காலத்தின் வேகத்தில் ஓடி காலத்தை வெல்வது தான்
உண்மையான விளையாட்டு என்று!
--
பேச தெரியாதா?
காற்று என்னிடம் சொல்கிறது ,
என்னிடம் வந்தால் நிம்மதி கிடைக்கும் என்று.
பறவை கூறுகிறது
என் பாடலை கேட்டால் நிம்மதி கிடைக்கும் என்று,
ஆனால், இங்கு மனிதர்களுக்கு பேசத் தெரிந்ததை விட
தெரியாமல் இருந்தால்
எல்லோரும் நிம்மதியாக இருந்திருக்கலாமோ??
வானம் நமக்காக காத்திருக்கிறது
நீ எப்போது என் மீது சவாரி செய்து பறப்பாய் என்று,
சிறகை விரி பற
வானம் நமக்காக காத்துக்கொண்டிருக்கிறது !
வா சேர்ந்து பறப்போம் !
(என் பெயர் அங்காள ஹர்ஷினியா. நான் வீரமணி அவர்களின் மகள். கணிதவியல் துறையில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு இயற்கையை ரசிப்பதும், பயணம் செய்வதும் மிகவும் பிடிக்கும்)