அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை: அண்ணாமலை!
நாமக்கல்: அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டுமென்ற ஒற்றைப்புள்ளியில் செயல்படுகிறோம் என்று பாஜக தமிழக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் மறைந்த பாஜக மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் வி.ரமேஷ் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்று அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அண்ணாமலை பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் சிறுநீரகத் திருட்டு அதிக அளவில் நடைபெற்று வருவதாக தெரிய வருகிறது. திமுகவைச் சேர்ந்த சிலர் இதற்கு உடந்தையாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த பிரச்சனைக்கு தமிழக அரசு உரிய விசாரணையை குழு அமைத்து சிறுநீரக திருட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மயிலாடுதுறை காவல்துறை கண்காணிப்பாளர் பத்திரிக்கையாளர்களை நேரடியாக சந்தித்து தனது குறைகளை தெரிவிப்பது விதிகளுக்கு புறம்பானது என்றாலும் அவருடைய மனக்குமுறலை தெரிவிக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்கு அவர் ஆளாகியுள்ளார். இந்த பிரச்சனை முதல்வர் நேரடியாக தலையிட்டு தேர்வு காண வேண்டும்.
அதிமுக, பாஜக கூட்டணி தொடர்பாக எந்தவித குழப்பமும் இல்லை. அமிர்தா எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் எடுக்க முடிவே இறுதியானது. 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.