பொங்கலுக்கு ரூ.3000 கொடுக்க...விவசாயிகளின் பயிர்க் கடன் பணத்தை மடைமாற்றிய திமுக அரசு: அண்ணாமலை

Meenakshi
Jan 09, 2026,12:55 PM IST

சென்னை: பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹3,000 கொடுக்க திமுக அரசிடம் பணம் இல்லாமல், விவசாயிகளின் பயிர்க் கடன் பணத்தை மடைமாற்றி, பல ஆயிரக்கணக்கான விவசாயிகளை இன்று மன உளைச்சலுக்கு தள்ளியிருக்கிறது திமுக அரசு என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


இது குறித்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தமிழக கூட்டுறவு சங்கங்களில், பழைய பயிர்க் கடன் முழுத் தொகையும் கட்டிவிட்டு, புதிய கடன் புதுப்பிப்புக்காக காத்திருக்கும் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள், பயிர்க் கடன் புதுப்பிக்கப்படாததால், கடும் பண நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.




பொங்கலுக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ₹3,000 கொடுக்க திமுக அரசிடம் பணம் இல்லாமல், விவசாயிகளின் பயிர்க் கடன் பணத்தை மடைமாற்றி, பல ஆயிரக்கணக்கான விவசாயிகளை இன்று மன உளைச்சலுக்கு தள்ளியிருக்கிறது திமுக அரசு.


பொங்கல் பண்டிகை கொண்டாடுவதே, விவசாயத்தைப் போற்றுவதற்காகத்தான் எனும்போது, தங்களது தேர்தல் விளம்பரத்துக்காக, விவசாயிகளை திட்டமிட்டு மோசடி செய்திருக்கிறது திமுக அரசு.


உடனடியாக விவசாயிகளின் பயிர்க் கடன்களைப் புதுப்பித்து, அதற்கான பணத்தை விடுவிக்க வேண்டும் என்றும், விவசாயிகளின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்றும், திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.