வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

Su.tha Arivalagan
Oct 24, 2025,05:12 PM IST

சென்னை: வங்கக் கடலில் மீண்டும் ஒரு குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் மூலம் எந்த அளவுக்கு நமக்கு மழை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


நடப்பு மழைக்காலத்தில்  வங்கக் கடலில் உருவாகியுள்ள 2வது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இதுவாகும். முதல் தாழ்வுப் பகுதி புயலாக மாறுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. பரவலாக மழையை மட்டுமே அது தந்து சென்றது. இந்த நிலையில் இன்று உருவாகியுள்ள தாழ்வு, உயர்ந்த மழையைத் தருமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இது புயலாக மாறக் கூடும் என்று முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது.




தென்கிழக்கு வங்கக் கடலில் இந்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. தெற்கு அந்தமான் பகுதியில் இது உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வட மேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


இது தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளுக்கு நல்ல மழையைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நகரும் விதம், திசை, வேகம் ஆகியவற்றைப் பொறுத்தே இதனால் நமக்கு என்னெல்லாம் சாதகம், பாதகம் என்பது தெரிய வரும். சென்னையைப் பொறுத்தவரை காலையிலிருந்தே மேக மூட்டமாக காணப்படுகிறது.