ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு வாய்ப்பு கிடைத்துள்ளது: குஷ்பு

Meenakshi
Nov 14, 2025,04:56 PM IST
சென்னை: ராகுல் காந்தி அரசியலை விட்டு விலகுவதற்கு மேலுமொரு காரணமும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது என்று தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்துள்ளார்.

பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக - ஐக்கிய ஜனதாதளம், சிராக் பாஸ்வானின் லோக்ஜன் சக்தி உள்ளிட்ட கட்சிகள் தேஜ கூட்டணியில் போட்டியிட்டன. இந்த கூட்டணி தற்போது அமோக வெற்றி பெற்றுள்ளது. பீகார் சட்டசபையில் உள்ள 243 தொகுதிகளுக்கான தேர்தல் நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டது. 

இவற்றில் பதிவான ஓட்டுக்கள் நவம்பர் 14ம் தேதியான இன்று காலை துவங்கி எண்ணப்பட்டு வந்தன. ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே பாஜக கூட்டணி பெரும்பாலான இடங்களில் முன்னிலையிலேயே இருந்து வந்தது.





இதுகுறித்து தமிழக பாஜக துணைத் தலைவர் குஷ்பு  தனது ட்விட்டர் பக்கத்தில், பீகாரில் என்டிஏ கூட்டணி வென்றுவிட்டது. நிதிஷ்குமார், நரேந்திர மோடி உள்ளிட்ட சில தலைவர்கள் வெல்வதற்காகவே பிறப்பார்கள். இருவரும் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் எண்ணற்ற சேவைகளை செய்துள்ளதால் என்டிஏ கூட்டணியை மக்கள் மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். 

காங்கிரஸ் கட்சிக்கு அழிவுக்காலம் வந்துவிட்டது. அரசியலில் இருந்து விலக ராகுல்காந்திக்கு மேலும் ஒரு காரணமும் வாய்ப்பும் கிடைத்திருக்கிறது என குஷ்பு விமர்சித்துள்ளார்.