அன்புள்ள அம்மா.. அருமையான அப்பா!
Aug 27, 2025,10:26 AM IST
- தீபா ராமானுஜம்
மாமனார் மெச்சிய மருமகளாக
மனம் நிறைத்தாய்!!
அப்பாவின் அன்பான துணைவியாய்
மதியூக மந்திரியாய்!!
எங்களின் தாலாட்டும் தாயாய்
பாசமிகு அன்னையாய்!!
பல பரிமாணங்கள் கொண்டாய்!!
இனிமையானவளே!! எங்களின் இல்லத்தரசியே!!
என்றும் உன் அன்புக்காக
ஏங்குகிறோம் அம்மா!!!
அன்புள்ள அப்பா!
அன்பு மனம் கொண்டவரே!!
ஆயிரத்தில் ஒருவரே!!
இனிமையான உள்ளத்துடன்...
ஈகை குணம் கொண்டவரே!!
உதவும் நல்ல எண்ணத்துடன்...
ஊன்றுகோலாய் இருப்பவரே!!
எங்களின் வாழ்க்கை வளம் பெறவே...
ஏணியாக ஆனவரே!!
ஒவ்வொரு நாளும் எமக்காக...
ஓய்வின்றி உழைத்தவரே!!
அன்புள்ள அப்பாவே...
உங்கள் அன்பை என்றும்
எதிர்பார்க்கின்றோம்!!