Gold Rate strikes twice: தங்கம் விலை ஒரே நாளில் 2 முறை.. காலையில் ரூ. 520.. மாலையில் ரூ.960 உயர்வு

Meenakshi
Apr 09, 2025,05:45 PM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண  தங்கத்தின் விலை இன்று காலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ள நிலையில், இன்று மாலை ரூ.960 உயர்ந்துள்ளது. 


கடந்த 4 நாட்களாக அதிரடியாக குறைந்து வந்த தங்கம் இன்று மீண்டும் காலை உயர்ந்தது. அது மட்டுமின்றி ஒரே நாளில் இரண்டாவது முறையாக தற்போது மீண்டும் உயர்ந்துள்ளது. அதுவும் சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.8,290க்கும், 24 கேரட் ஒரு கிராம் ரூ.9,044க்கும் விற்கப்பட்டு வருந்த நிலையில், தற்போது கிராமிற்கு ரூ.120 உயர்ந்து ரூ.8,410க்கும் ஒரு சவரன் ரூ.67,280க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




இன்று  காலை வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1 குறைந்திருந்தது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 102 ஆகவும், 8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 816 ஆகவும் இருந்தது.  தற்போது இந்த வெள்ளி விலை கிராமிற்கு ரூ.2 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி விலை தற்போது ரூ.104க்கு விற்கப்பட்டு வருகிறது.


ஒரே நாளில் தங்கம்  விலை இரண்டு முறை உயர்ந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.