அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம்: ஏ.ஆர். ரகுமான்
சென்னை: அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம் என்று ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
1992ம் ஆண்டு ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இதனை தொடர்ந்து பல்வேறு படங்களில் இசையமத்து முன்னணி இசையமைப்பாளராக உருவாகினார். அதுவும் உலக அளவில் கவனிக்கப்படும் இசையமைப்பாளராக உருவாகினார். சினிமாவில் சுமார் 33 ஆண்டுகளாக இசையமைத்து வருபவர்.
தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட விருதுகளை வாங்கியிருக்கும் ஏ.ஆர். ரகுமான் தமிழில் கடைசியாக தக் லைஃப் படத்துக்கு இசையமைத்திருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன், ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சாயிரா பானுவை விவாகரத்து செய்தாக அறிவித்தார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ளனர். இது குறித்து கருத்து எதுவும் தெரிவிக்காமல் இருந்த ஏ.ஆர்.ரகுமான், சமீபத்தில் ஒரு பேட்டியின் போது,
சில நேரங்களில் நாம் நிறைய திட்டங்களை தீட்டுகிறோம், ஆனால் அது ரத்தாகிவிடுகிறது. நான் தண்ணீரைப் போல, காலத்தின் ஓட்டத்தில் செல்கிறேன். வேலையிலும் அப்படித்தான். முன்பு, நான் ஒரு வெறி பிடித்தவன் போல, இரவும் பகலும் வேலை செய்தேன். அதிகமாக வேலை செய்யும்போது சில நேரங்களில் வாழ்க்கையை இழந்துவிடுகிறோம். இப்போது நான் தனிப்பட்ட வாழ்க்கையை அனுபவிக்கவும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும் நான் வேலைப்பளுவை குறைத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.