அழகான அரேகா பனை (Areca palm).. பாசிட்டிவிட்டி பரப்பும்.. ஆரோக்கியத்துக்கும் நல்லது!

Swarnalakshmi
Jul 01, 2025,10:39 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


அரேகா பனை செடி வீட்டிற்கு ஒரு அழகான உட்புற தாவரம் மட்டுமல்ல, வீட்டின் வாசல் வரவேற்பு அறையில் வைக்க, வாசல் படி முன்பு வைக்க ,வீட்டு வாசல் கேட் முன்பும் வைக்க ஒரு அழகான தாவரம். 


இந்த தாவரம் பெரும்பாலான இடங்களில் பெரிய அலுவலகங்களில், மாளிகை வீடுகளில், மருத்துவமனைகளின் முன்பு, பெட்ரோல் பங்குகளில் மேலும் இது போன்ற பெரும்பாலான இடங்களில் நாம் இந்த தாவரம் தொட்டிகளில் அழகாக வைத்திருப்பதை பார்த்திருக்கிறோம்.


இது அழகுக்கு அழகு சேர்ப்பது மட்டுமல்ல, பல நன்மைகளையும் கொடுக்கும் தாவரம். குறிப்பாக வீட்டின் காற்றை சுத்திகரிக்கும் திறன் கொண்டது. வாஸ்து சாஸ்திரத்தின் படி நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் தன்மையுடையது என்று நம்பப்படுகிறது.


இந்த தாவரம் எப்படி? காற்று சுத்தம் செய்கிறது என்பதை அறிந்தாலே சுவாரஸ்யமாக இருக்கும்.. வாருங்கள் பார்க்கலாம்... இந்த  சிறு தகவலை...




அரேகா பனை தாவரம் தீங்கு விளைவிக்கும் நச்சுக்கலான ஃபார்மாலிட்டி ஹைட் பென் சீன்  மற்றும் சைலின் நச்சுக்களை காற்றில் இருந்து நீக்கும் தன்மை உடையது இதனால் இதனை வீட்டில் வாசல் முன்பு வைப்பதனால் சுற்றியுள்ள காற்றில் உள்ள நச்சுக்களை நீக்கி காற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.


இது நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் சக்தி அதிகம் உள்ள தாவரம் .எனவே வீட்டில் கிழக்கு அல்லது வடக்கு திசையில் இந்த செடியை வைப்பது நேர்மறை  ஆற்றலை ஈர்க்க பெரும் உதவி புரிகிறது. இந்த தாவரம் ஒரு எளிமையான முறையில் பராமரிக்க கூடிய தாவரமாகும் .இதற்கு குறைந்தபட்ச பராமரிப்பு மற்றும் கவனம் இருந்தாலே போதும் இந்த தாவரம் செழிப்பாக வளரும்.


நமக்கு அதிகம் வெயில் இருப்பதனால் இதனை நிழலான இடத்தில் வைத்திருக்கும் போது அதனுடைய அழகான இலைகள் பசுமை மாறாமல் இருக்கும். அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் செடியை வெயில் படும் இடத்திற்கு மாற்றி வைத்து பிறகு நிழலான இடத்தில் வைப்பது இதன் இலையை பசுமை மாறாமல் பாதுகாக்கலாம். 


அரேகா பனை வீட்டில் வைத்திருந்தாலே நேர்மறை ஆற்றல் பெருகும். எதிர்மறை ஆற்றலை குறைத்து மன அழுத்தத்தை தணிக்க உதவுகிறது என்று நம்பப்படுகிறது .இது பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதனால் வீட்டின் உட்புற அலங்காரத்திற்கு இது அருமையான தேர்வு. அ ரேகா பனை உட்புறத்தில் ஈரப்பதத்தை அதிகரிக்கவும் பெரும் உதவி புரிகிறது .இது வறண்ட கால நிலையில் பயனுள்ளதாக இருக்கிறது.


இதனை எப்படி? பராமரிப்பது என்றால்.. இந்தச் செடிக்கு  வடி கால் வசதி உள்ள மண்ணும், பிரகாசமான மறைமுக ஒளியும் தேவை .மேலும் தண்ணீர் பாய்ச்சுவது, மண்ணின் மேல் பகுதியை தொட்டு பார்த்து அது காய்ந்த பிறகு தண்ணீர் பாய்ச்சினாலே போதும். உரமிடுதல் வசந்த காலம் முதல் இலையுதிர் காலம் வரை தேவை.


வீட்டில் நேர்மறை ஆற்றல் இருந்தாலே நமக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். அனைத்து வளங்களும் செழிப்பும் வரவழைக்க அரேகா பனை செடியை நாம் நர்சரிகளில் இருந்து வாங்கி வளர்த்து இன்புறுவோமாக. மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.