கமலமுகக் கவர்ச்சியிலே கண்கள் குளமாகுதே!

Su.tha Arivalagan
Feb 03, 2026,10:12 AM IST

- கோ.அறிவுசெல்வி இராஜாராம்


எண்ணமிருக்குது

எழுத்துமிருக்குது

கண்ணும் இருக்குது

கவிதைபிறக்குது

கண்டது போல்

விண்டுரைக்க

மண்டு என்னால்

முடியலையே


எழுதி எழுதி அழிக்கிறேன்

எழுத்தில் அவன்

அடக்கமா

எழில் அரக்கன்

இதயத்தையே

மெழுகாய் ஆக்கி அழிக்கிறான்




கண்கள் என்னைத் தின்னுமே

கதறுகிறேன்

குழந்தையாய்

கமலமுகக் கவர்ச்சியிலே

கண்கள் குளமாகுதே


கரங்கள் தன்னில் வில்லும்

அம்பும்

காலமெலாம்

மயக்குமே

இடை தனிலே மரவுரியே

ஐயோ என்னைக்கொல்லுதே


இறுதியாக இணைமலர்கள் இதயத்தையே

ஈர்க்குமே

இப்படி ஒரு அற்புதமா

எப்படிச் சொல்வேனதே!


(கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் கோ. அறிவுசெல்வி இராஜாராம். கவிதைகள் எழுவதில் ஆர்வம் கொண்டவர். திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையத்தின் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்று வருபவர்)