சுற்றுச்சூழல்!

Su.tha Arivalagan
Nov 28, 2026,04:08 PM IST

- அரியூர் ரேணுகா நாராயணன்


நச்சுக் காற்றைத் தருவதுதான் புகை மண்டலம் என்பதை மறந்துவிடாதீர்கள்... 

நீங்கள் வாகனப் புகையைக் கட்டுப்பாட்டில் வைத்திடுங்கள்!


நிலத்தை அழிப்பதுதான் நெகிழிப் பைகள் என்பதை மறந்துவிடாதீர்கள்... 

நீங்கள் மீண்டும் மீண்டும் துணிப்பையைப் பயன்படுத்துங்கள்!




நோயினைத் தருவதுதான் அசுத்த நீர் என்பதை மறந்துவிடாதீர்கள்... 

நீங்கள் ஆறு குளங்களில் கழிவுகளைக் கலக்காதீர்கள்!


வெப்பத்தை உயர்த்துவதுதான் காடழிப்பு என்பதை மறந்துவிடாதீர்கள்...

நீங்கள் ஒவ்வொரு வீட்டிலும் செடிகளை நட்டிடுங்கள்!


செவிகளைப் பாதிப்பதுதான் ஒலி மாசு என்பதை மறந்துவிடாதீர்கள்... 

நீங்கள் தேவையற்ற இடங்களில் ஒலிப்பானைத் தவிருங்கள்!


மண்ணை நஞ்சாக்குவதுதான் ரசாயன உரங்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்... 

நீங்கள் விளைநிலங்களில் இயற்கை உரத்தை இட்டிடுங்கள்!


எதிர்காலத்தைத் தருவதுதான் தூய்மையான உலகம் என்பதை மறந்துவிடாதீர்கள்... 

நீங்கள் குப்பைகளைத் தரம்பிரித்து குப்பைத் தொட்டியில் போடுங்கள்!


உயிரினங்களைக் காப்பதுதான் சூழலியல் சமநிலை என்பதை மறந்துவிடாதீர்கள்... 

நீங்கள் இயற்கையோடு இணைந்து வாழ்வினை நடத்திடுங்கள்! 


(அரியூர் ரேணுகா நாராயணன், இல்லத்தரசி. திருச்சியைச் சேர்ந்தவர். பிஏ தமிழ் இலக்கியம் பயின்றவர். நகைச்சுவைத் துணுக்குகள், சமூகம் சார்ந்த கட்டுரைகள், கதைகள், கவிதைகள் உள்ளிட்டவற்றை எழுதி வருகிறார். பல்வேறு முன்னணி தமிழ் நாளிதழ்கள், வார இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன)