ஆருத்ரா தரிசனம் எப்ப வருது தெரியுமா.. அதோட முக்கியத்துவம் என்னன்னு தெரியுமா?
- கலைவாணி கோபால்
சென்னை: திருவாதிரை என்பதன் வடமொழி மருவிச் சொல் ஆருத்ரா என்று சொல்லப்படுகிறது. இந்த திருவாதிரை நட்சத்திரம் ஆனது. 27 நட்சத்திரங்களில் தனித்துவமாக விளங்குவது திருவாதிரை மற்றும் திருவோணம் இவை இரண்டும் மட்டுமே திரு திரு என்ற அடைமொழிவுடன் வருவதால் இவை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சிறப்புமிக்க இந்த திருவாதிரை நட்சத்திரம் மகத்துவமான மார்கழி பௌர்ணமி அன்று இரவு தொடங்குகிறது. இதன் சிறப்பு என்னவென்றால், தாருகாவனத்தில் உள்ள முனிவர்கள், சிவபெருமானுக்கு எதிராக வேள்விகள் நடத்தி ( கருமத்தை மட்டுமே செய்தால் போதுமானது கடவுள் கிடையாது.) என்ற ஆணவத்தில் வாழ்ந்து வந்தனர்.
இதற்கு பாடம் புகட்டும் வழியாக சிவபெருமான் பிச்சாடனார் வேடமிட்டு ரிஷி பத்தினிகளை தன் பின்னால் வரும் படி ஒரு நாடகத்தை நடத்தினார் இதில் கோவம் அடைந்த ரிஷிகள் சிவபெருமானுக்கு எதிராக யாகங்களை வளர்த்தி அதில் யானை, மான், உடுக்கை, முயலகன் என பல பேரை ஏவினார்கள்.
ஆனால் , சிவபெருமானோ யானையின் ஆடையாகவும், மானின் தோலை , அமரும் மெத்தையாகவும், உடுக்கையை கையிலும், முயலகனை தனது வலது காலை ஊன்றி இடது காலை தூக்கி நடனத்தை முனிவர்களில் ஆணவத்தை அடக்கியது இந்த ஆருத்ரா நட்சத்திரம் அன்று நிகழ்ந்ததாகும்.
அதேபோல் தனது பக்தனான சேர்ந்தனாரின் பெருமையை உலகறிய பிச்சாடனார் வேடத்திலேயே அவர்கள் வீட்டிற்கு சிவனடியாராக உணவு உண்ண சென்றார். அப்போது அவர்களிடம் இருந்தது அரிசி மாவு வெள்ளமாக மட்டுமே அதை வைத்து சேந்தனாரில் மனைவி கலியாகவும். மீதம் இருந்த ஏழு காய்கறிகளில் ஒன்று ஒன்றை கூட்டாகவும் செய்து பிச்சாடனார் வேடத்தில் வந்த சிவபெருமானின் உணவாக தந்தனர்.
அதனாலேயே ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜ பெருமானுக்கு திருவாதிரை களியும், ஏழு காய்கறி கூட்டம் இன்று வரை பிரசாதமாக நெய்வேத்தியம் செய்யப்படுகிறது. இந்நன்னாளில் தனது பசியை போக்கிய சிவ பக்த நாராயண சேந்தனார் மற்றும் அவரது மனைவிக்கு திருநடனம் செய்து காத்த தந்தது திருவாதிரை நட்சத்திரம் நாளாகும்.
அது மட்டுமல்லாமல் பரங்கிமலை வரும் வியாக்ரபாதம் முனிவரும் நடராஜப் பெருமானின் நடனத்தைக் காணாமல் கொண்டு வந்தனர். அவர்களுக்குமே திருவாதிரை நாளன்று சிதம்பரத்தில் அவர்களுக்கு அம்பாளுடன் சேர்ந்து நடராஜா பெருமானின் திருநாடன காட்சியைத் தந்ததும் திருவாதிரை நாளாகும்.
அதனாலேயே மார்கழி வரும் திருவாதிரை மார்கழி திருவிழா அன்று நம் நடராஜர் பெருமானின் நடனத்தைக் இந்நாளில் காண முடியும் என்பது மக்களின் மிகப்பெரிய ஐதீகமாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது.
(கலைவாணி கோபால், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சி திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)