இறைவன் ஜோதி வடிவானவன்!
Feb 01, 2026,01:41 PM IST
- கவிஞர் க.முருகேஸ்வரி
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்... என்றார் வள்ளலார்...
கடலூர் மாவட்டம் மருதூரில் அவதரித்த ஒரு தெய்வப்பிறவி தான் வள்ளலார் என்னும் இராமலிங்க அடிகளார்....
அண்ணின் ஆசைக்காக படிக்கச் சென்றாலும்...கந்த கோட்டம் முருகனிடம் தான் அவரின் அன்புக்கோட்டம் இருக்கிறது என்பதை அவரின் குரு கண்டறிந்து கொண்டார்.
கந்தனின் முன் அவர் பாடிய பாடலைக் கேட்ட குருவின் கண்கள் பொங்கி வழிகிறது... தெய்வப்பிறவி அவர் என்று உணர்ந்து கொண்டார்.
வள்ளலார் கொள்கைகளில் மாற்றுக் கருத்து கொண்டோர் பலர்.ஆனால் வள்ளலாரோ தனக்கென கொள்கைகளை வகுத்துக் கொண்டு அதனைப் பின்பற்றத் தொடங்கினர்.
இவர் பாடிய ஆறாயிரம் பாடல்களின் தொகுப்பே திருவருட்பா... திருவருட்பிரகாச வள்ளலார்... உண்மையான ஆன்மீகத்திற்கு சாதி ஒரு பொருட்டு இல்லை என்றார்.
பசித்தவர்க்கு சாதி,மதம், இனம் மொழி என எந்தப் பாகுபாடும் பார்க்காமல் உணவளிக்க வேண்டும் என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டார். எல்லா மதங்கள் கூறுவதும் ஒரே உண்மை என்றார். இறைவன் ஜோதி வடிவானவன் என்றார்.
கடலூர் மாவட்டம் வடலூரில் சத்திய தரும சாலையை நிறுவினார். அங்கே வள்ளலாரின் கொள்கைகளைப் பின்பற்றி இன்றளவும் லட்சக்கணக்கான மக்களுக்கு உணவளிக்கப்படுகிறது.
அவர் ஜோதியான இந்நாளில் இங்கு இறைவனின் ஜோதி வடிவ தரிசனம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங் கருணை!
(கவிஞர் க.முருகேஸ்வரி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வயலாநல்லூர், பூவிருந்தவல்லி திருவள்ளூர் . 25 வருட பணி அனுபவம் உள்ளவர். கவிதை, கட்டுரை, சிறுகதை, வகுப்பறை அனுபவம், சினிமா போன்ற தலைப்புகளில் தொடர்ந்து எழுதி வருகிறார். you tube Channel களில் பட்டிமன்றம் பேசியுள்ளார்).