காலில் எலும்பு முறிந்த 7 வார யானைக் குட்டிக்கு விமானம் கொண்டு வந்து உயர்தர சிகிச்சை

Su.tha Arivalagan
Nov 21, 2026,10:23 AM IST

 கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் காலில் தொடை எலும்பு முறிந்து உயிருக்குப் போராடி வந்த 7 வாரமே ஆன பச்சிளம் யானைக் குட்டி ஒன்று, மேல் சிகிச்சைக்காகச் சிறப்பு விமானம் மூலம் குஜராத் மாநிலத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   


அசாம் மாநில வனப்பகுதியில் சுற்றித் திரிந்த 7 வார யானைக் குட்டிக்கு எதிர்பாராதவிதமாகக் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பரிசோதனையில், அந்த யானைக் குட்டியின் காலில் உள்ள தொடை எலும்பு முறிந்திருப்பது கண்டறியப்பட்டது. மிகவும் சிறிய வயதுடைய யானைக் குட்டி என்பதால், அதற்கு உடனடியாக அதிநவீன மற்றும் உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 


இதையடுத்து, அந்த யானைக் குட்டியை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சயாந்தமான ஆனந்த் அம்பானியின் வனவிலங்குகள் மறுவாழ்வு மற்றும் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால், அசாமின் கவுஹாத்தியில் இருந்து குஜராத்தின் ஜாம்நகருக்குச் சாலை மார்க்கமாகச் செல்ல வேண்டுமென்றால் சுமார் 2,500 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். எலும்பு முறிவுடன் இருக்கும் பச்சிளம் யானைக் குட்டியால் இவ்வளவு நீண்ட தூர சாலைப் பயணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால், சாலைப் பயணத்தைத் தவிர்க்க வனவிலங்கு ஆர்வலர்களும் அதிகாரிகளும் திட்டமிட்டனர்.   




இந்நிலையில், ஆனந்த் அம்பானியின் சிறப்பு ஏற்பாட்டின் பேரில், யானைக் குட்டியை விமானம் மூலமாகவே கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, அசாமின் கவுஹாத்தி விமான நிலையத்திலிருந்து சிறப்பு சரக்கு விமானம் மூலம் அந்த யானைக் குட்டி குஜராத்தின் ஜாம்நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பயணத்தின் போது யானைக் குட்டிக்கு எந்தவித அசௌகரியமோ அல்லது வலியோ ஏற்படாத வகையில், பிரத்யேக வலை மற்றும் மெத்தைகள் கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் விமானத்திற்குள் செய்யப்பட்டிருந்தன. 


கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறைப் பணியாளர்களின் தீவிர கண்காணிப்புடன், சுமார் 4 மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு யானைக் குட்டி பத்திரமாக ஜாம்நகர் சென்றடைந்தது. தற்போது ஜாம்நகரில் உள்ள சிறப்பு மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த 7 வார யானைக் குட்டிக்கு, நிபுணர் குழுவினரால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலை வழியாகப் பல நாட்கள் செல்ல வேண்டிய பயணத்தை, விமானம் மூலம் வெறும் 4 மணி நேரத்தில் சாத்தியமாக்கி, ஒரு வனவிலங்கின் உயிரைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட இந்த முயற்சிக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். குஜராத் மாநிலத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   


அசாம் மாநில வனப்பகுதியில் சுற்றித் திரிந்த 7 வார யானைக் குட்டிக்கு எதிர்பாராதவிதமாகக் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. பரிசோதனையில், அந்த யானைக் குட்டியின் காலில் உள்ள தொடை எலும்பு முறிந்திருப்பது கண்டறியப்பட்டது. மிகவும் சிறிய வயதுடைய யானைக் குட்டி என்பதால், அதற்கு உடனடியாக அதிநவீன மற்றும் உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 


இதையடுத்து, அந்த யானைக் குட்டியை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு சயாந்தமான ஆனந்த் அம்பானியின் வனவிலங்குகள் மறுவாழ்வு மற்றும் சிகிச்சை மையத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஆனால், அசாமின் கவுஹாத்தியில் இருந்து குஜராத்தின் ஜாம்நகருக்குச் சாலை மார்க்கமாகச் செல்ல வேண்டுமென்றால் சுமார் 2,500 கிலோமீட்டர் தூரம் பயணிக்க வேண்டியிருக்கும். எலும்பு முறிவுடன் இருக்கும் பச்சிளம் யானைக் குட்டியால் இவ்வளவு நீண்ட தூர சாலைப் பயணத்தைத் தாங்கிக் கொள்ள முடியாது என்பதால், சாலைப் பயணத்தைத் தவிர்க்க வனவிலங்கு ஆர்வலர்களும் அதிகாரிகளும் திட்டமிட்டனர்.   


இந்நிலையில், ஆனந்த் அம்பானியின் சிறப்பு ஏற்பாட்டின் பேரில், யானைக் குட்டியை விமானம் மூலமாகவே கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, அசாமின் கவுஹாத்தி விமான நிலையத்திலிருந்து சிறப்பு சரக்கு விமானம் மூலம் அந்த யானைக் குட்டி குஜராத்தின் ஜாம்நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பயணத்தின் போது யானைக் குட்டிக்கு எந்தவித அசௌகரியமோ அல்லது வலியோ ஏற்படாத வகையில், பிரத்யேக வலை மற்றும் மெத்தைகள் கொண்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் விமானத்திற்குள் செய்யப்பட்டிருந்தன. 


கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனத்துறைப் பணியாளர்களின் தீவிர கண்காணிப்புடன், சுமார் 4 மணி நேர விமானப் பயணத்திற்குப் பிறகு யானைக் குட்டி பத்திரமாக ஜாம்நகர் சென்றடைந்தது. தற்போது ஜாம்நகரில் உள்ள சிறப்பு மருத்துவ மையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த 7 வார யானைக் குட்டிக்கு, நிபுணர் குழுவினரால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாலை வழியாகப் பல நாட்கள் செல்ல வேண்டிய பயணத்தை, விமானம் மூலம் வெறும் 4 மணி நேரத்தில் சாத்தியமாக்கி, ஒரு வனவிலங்கின் உயிரைக் காப்பாற்ற எடுக்கப்பட்ட இந்த முயற்சிக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.