ஆதர்ஷம்

Su.tha Arivalagan
Apr 15, 2026,12:38 PM IST

- கவிதா அறிவழகன்


சூரியனின் ஒளிக்கதிர்களும்,

நிலவின் வெண்மதியும்

சேர்ந்து வாழும் வாழ்க்கையே

ஆதர்ஷமாகும்.


அந்த இரண்டும்

ஓருயிராய் உதிக்கும்

ஒளியே

ஆதர்ஷமாகும்.


வானில் அந்த ஒளி,

மண்ணில் இந்த உணர்வு;


இதைக் கற்றுக்கொள்ள

புத்தகமும், ஊடகமும்

தேவையில்லை…




நம்மைச் சுற்றி

நடப்பவற்றை வைத்துப்

பின்பற்றத் தோன்றும்

ஒளியே அது.


ஆதர்ஷம் என்றால்

ஒருவர் மற்றொருவரின்

உணர்வுகளைப் புரிந்து கொண்டு 

செயல்படும் ஒளியானது.


இது உணர்வுபூர்வமானது…

இதில் சத்தமில்லை

மௌனத்தினால்

மனம் கோர்க்கும்

மகாசக்தி அது.


சத்தமாகப் பேசத் தெரியாது,

சாதனைகள் புரியத் தெரியாது…

ஆனால்,

மற்றவருக்கு எடுத்துக்காட்டாக

வாழத் தெரியும்.


ஆதர்ஷம் என்பது

மற்றவர்களின் செயல்களை நிழலாய்ப் 

பின்பற்றுவது அல்ல,

சுற்றி இருக்கும் சூழல்களைக் கொண்டு

நம்மை நாமே

வளர்த்துக் கொள்வது

ஓர் அழகிய ஒளி.


காலம் கடந்தும்

கரையாத

காவியம் அது.


ஒருநாள்…

என்றாவது ஒரு நாள்,

நாம் யாரோ ஒருவருக்காக

ஆதர்ஷமாக மாறும்போது

மீண்டும்

அந்த ஒளி பிறக்கும்.


(Kavitha Arivalagan, Creative writers, Dharmapuri)