அது போதும் எனக்கு!
Oct 15, 2026,02:18 PM IST
- த. ரஜிதா
என் முதுகில் லேசாய் தட்டு,
உன் தலையை சாய்வாய் அசை,
மெதுவாய் கண்கள் மூடித் திற,
அது போதும் எனக்கு.
ஒரு சின்ன தொடுகை,
ஒரு குறு புன்னகை,
ஒரு விரல் பிணைப்பு,
ஒரு சிறு அணைப்பு,
அது போதும் எனக்கு.
நீ என்ன செய்தாலும்,
அது மிருதுவாய், சுகமாய் மிளிரும்.
பாகாய், கனியாய், தேனாய் ததும்பும்.
அது போதும் எனக்கு.
வாழ்க்கை சின்னஞ்சிறு அசைவுகளாய்,
அத்தனை பார்வையும் இசைவுகளாய்,
ஒவ்வொரு சொல்லும் நேர்மறையாய்,
நீர் தேடும் வேர் போல்
உன்னைத் தேடும் என் மனம்.
எங்கே இருக்கிறாய் நீ?
எனக்குள் ஒரு பாதி,
அவனுக்குள் மறு பாதி.
இரு பாதியும் ஒன்றாய் சேர,
இப்போதே வா என் மனம் நிறைக்க.
அது போதும் எனக்கு.
(ரஜிதா த, பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்), அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, படப்பை, காஞ்சிபுரம்)