அப்பம், அம்மா அப்பம் .. சிறார் பாடல்!

Su.tha Arivalagan
Oct 01, 2026,12:25 PM IST

- ஆ.வ.உமாதேவி


அப்பம், அம்மா அப்பம் 

ஆச்சி சுட்ட அப்பம்

இனிப்பு மிக்க அப்பம் 

ஈக்கள் தீண்டா அப்பம் 

உற்சாகமாய் தின்னலாம் 

ஊருக்கெல்லாம் கொடுக்கலாம் 

எட்டி எட்டி பார்த்தேனே 




ஏழு அப்பம் தந்தாரே 

ஐந்து அப்பம் தின்றேனே 

ஒரு அப்பம் அக்காவுக்கு 

ஒரு அப்பம் அண்ணனுக்கு 

ஓடி ஓடி கொடுத்தேனே 

அவ்வையாரும் சொன்னாரே 

அஃதை நாமும் கேட்போமே! 


கொடுத்து கொடுத்து உண்போமே

ஒற்றுமையாய் வாழ்வோமே!


(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர்,  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, முருக்கம்பட்டு காலனி, திருத்தணி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்.)