சொல்லாத சந்தோஷம் சொல்லாமல் அள்ளுது.. பள்ளிக்கூடம் வந்தாலே சந்தோஷம் பொங்குது!

Su.tha Arivalagan
Oct 05, 2026,05:40 PM IST
- ஆ.வ உமாதேவி

அனிச்சம் பூ அழகி 
அன்பு கொண்ட பிள்ளைகளே! 
பூப்போன்ற பேரழகி 
துள்ளி வரும் செண்பகமே! 

துள்ளித்துள்ளி ஆடிக்கிட்டு 
நாங்க இங்க வந்தோமே! 
அம்மா உங்க கிட்ட பாடம் படிக்க வந்தோமே! 

ஓடி வாங்க ஓடி வாங்க! 
பள்ளிக்கூடம் ஓடி வாங்க! 
புத்தகத்தை எடுத்துக்கிட்டு 
பள்ளிக்கூடம் ஓடி வாங்க. 



பள்ளிக்கூடம் போகணும்னு பாடங்களை படிக்கணும்னு தோணுதடி! எனக்கு தோணுதடி! 

ஞாயிறன்றும் பள்ளிக்குத்தான் வந்து வந்து படிக்கணும்னு தோணுதடி எனக்கு தோணுதடி. 

சொல்லாத சந்தோஷம் சொல்லாமல் அள்ளுது. 
பள்ளிக்கூடம் வந்தாலே சந்தோஷம் பொங்குது. 

ஏ புள்ள! வா புள்ள! லட்சியத்தை நோக்கிச் செல்ல.

தாராங்க தராங்க சலுகைகளை தராங்க. பிள்ளைகளைப் படிக்க வைக்க நலத்திட்டங்கள் தராங்க. 

பாடம் நல்லா படிக்கணும்னு நீயும் தான் முடிவு எடு. பள்ளியில் படிச்சுப்புட்டு நீயும் தான் முன்னேறு. 

பள்ளிக்கூடம் வந்தாலே, காமராசர் காலை உணவு, எம்.ஜி.ஆர். சத்துணவு கிடைக்கும்ங்க.

யோகாவோடு உடற்பயிற்சி நித்தமும் நீ செய்திடு. 

ஓ தந்தனா தந்தனா தந்தனா. 

ஜாலி ஜாலி ஏ ஏ ஜாலி ஜாலி 
ஜாலி ஜாலி ஓகோ ஜாலி ஜாலி.

வாத்தியாரு சொல்ற படி கேட்டு நல்லா படிக்கணும்னு தோணுதடி! எனக்கு தோணுதடி!

நித்தம் நித்தம் பள்ளிக்குத்தான் உற்சாகமாய் வந்து படிக்கணும்னு தோணுதடி! எனக்கு தோணுதடி!

வராத  பிள்ளையும் பள்ளிக்கூடம் வருகுது. 
வந்த பிள்ளையும் உற்சாகமாய் படிக்குது. 

ஏ புள்ள! வா புள்ள! இலட்சியத்தை நோக்கிச் செல்ல. 

(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர்,  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, முருக்கம்பட்டு காலனி, திருத்தணி ஒன்றியம், திருவள்ளூர் மாவட்டம்)