அவன் இதயச்சிறையிலேயே என் வாழ்க்கை கழிய வேண்டும்.. அவளின் (ல்) அவன்! (10)
- ரதி தேவி
ரதியும் அவளது அம்மாவும் விழுப்புரம் செல்லத் தயாராகிக் கொண்டு இருந்தனர். அம்மா, பயணத்திற்குத் தேவையானவை எல்லாம் எடுத்து வைத்தாள். ரதியும் சிலவற்றை எடுத்து பேக்கில் வைத்தாள்.
"ரதி ரெடியா ஆகிட்டியா?"
"ம்.. ஐ அம் ரெடி."
"ரதி ஆட்டோவுக்கு கால் பண்ணி சொல்லுமா"
"சரிம்மா!"
ஆட்டோவுக்கு கால் பண்ணும் போதே வெளியில் ஏதோ சத்தம் கேட்டு வந்தாள். பார்த்தவளுக்கு அதிர்ச்சி.. நெஞ்சு படபடவென அடித்தது. மயக்கம் வருவது போன்று வாசலிலே நின்று விட்டாள்.
"ரதி.. ரதி... ஆட்டோவுக்கு கால் பண்ணியா?" கேட்டுக் கொண்டே வந்த அம்மாவுக்கும் அதிர்ச்சி.
"என்னடி ஊருக்குக் கிளம்பிட்டியா?"
"ஆமா. உனக்கு என்ன வேணும்?"
"என்ன வேணுமா? என்கூட வரணும்."
"முடியாது. இங்கிருந்து போயிடு. அம்மா.. சொல்லு போகச் சொல்லு."
"ஆமா! இங்க பாரு இனிமேல் என் பொண்ணு உன்னுடன் வர மாட்டாள். உன்னை முறைப்படி என்ன செய்ய வேண்டுமோ? அதைச் செய்கிறோம்."
"என்ன செய்வீங்க, டைவர்ஸ் நோட்டீஸ் விடுவீங்களா? அதையும் பார்க்கலாம்."
"பாரு.... இப்போ கிளம்பு. இல்லை என்றால் போலீஸை வரச் சொல்லுவேன்."
"என்னடி ரதி.. உனக்கு அவ்வளவு திமிரா.. போடி போ... பார்ப்போம் நீ எப்படி இருக்கப் போகிறாய் என்று..."
அவன் கிளம்ப.... ரதியும் அம்மாவும் ஆட்டோவில் ஸ்டேஷன் வந்தனர்.
அவர்கள் ட்ரெயின் வரும் பிளாட்பாரத்திற்கு வந்து வெயிட் பண்ணிக் கொண்டு இருந்தனர்.
ரதி மிக மிகவும் சோர்வாக அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
"ரதி கவலைப்படாத. விழுப்புரம் சென்று ஆபீஸிக்கு போனா சரியாகிடும்."
"ம்ம்... சரிம்மா..."
"ரதி..."
"சொல்லும்மா..."
"அவனுக்கு முறைப்படி டைவர்ஸ் கொடுத்து விடுவோமா? சொல்லு..."
"ம்ம்...... பார்க்கலாம் அம்மா...."
ரயில் வந்ததும் இருவரும் ஏறிக் கொண்டு, அவர்களுடைய இருக்கையில் அமர்ந்து கொண்டனர். இருக்கை சீட்டில் அமர்ந்தவுடனே, கடந்த முறை மதனுடன் பயணம் செய்யும் போது ஏற்பட்டதை மனதை அசை போட ஆரம்பித்தாள்.
"ஹலோ ரதி..."
"எஸ். சொல்லு ராஜி"
"என்னடி ரதி கிளம்பிட்டியா?"
"ஆமான்டி... ஜஸ்ட் நவ்... ஆன் த வே டூ விழுப்புரம்..."
"சரிடி பத்திரமா வா.. நீ ஆபீஸ் வந்தால்தான் எனக்கு நிம்மதியாக இருக்கு. நீ எப்ப வருவனு பார்த்துக் கொண்டு இருக்கேன்."
"ஓகே டி, பை..."
ஜன்னலோரம் வருடிய தென்றலின் தீண்டலில் இசை மீடியே கொஞ்சம் இதயத்தை இளைப்பாறச் செய்தார். இந்த வாழ்க்கை இப்படியே இருந்து விடக்கூடாதா? இனிமேல் நம் வாழ்க்கையை மிக இனிமையானதாக அமைய வேண்டும். இனிமேல் என் கரம் பிடிப்பவர், என்னை அவன் இதயத்திற்குள்ளேயே சிறை வைக்க வேண்டும். இதயச் சிறையிலேயே என் வாழ்நாளைக் கழிக்க வேண்டும்.
வாட்ஸ்அப் மெசேஜ் சத்தம் கேட்டு போனை எடுத்தாள்.
"ஹாய் ரதி..."
"எஸ். சொல்லுங்க மதன்..."
"ரதி... கிளம்பிட்டீங்களா..."
"எஸ் மதன்... ஆன் த வே..."
"ரதி... நான் நாளைக்குத்தான் கிளம்பறேன். சென்னை வந்ததும் நாம் சந்திக்க வேண்டும்."
"ம்ம்... மதன்..."
"ரதி.. மறுபடியும் உன் விழிகளைக் காண என் விழிகள் துடிக்கின்றது. உன் செங்கரங்களைத் தீண்ட என் கரங்கள் காத்திருக்கின்றது. ரதி ஏதாவது பதில் சொல்லு."
"ம்ம்... ஓகே மதன்.. நாம் சந்திக்கும் பொழுது பேசிக்கலாம்..."
"ரதி.. சாப்பிட்டியா..."
"ம்ம்... நீங்க."
"எஸ் ரதி... அப்புறம் என் அம்மா, என் இரண்டாம் கல்யாணத்துக்கு பொண்ணு போட்டோ காட்டி... பிடித்ததைச் சொல்ல சொல்கிறார்... உன் முடிவுதான் அடுத்ததான என் வாழ்க்கை ஆரம்பம். கண்டிப்பாக நான் உனக்கு நல்ல கணவனாக, நல்ல..."
"துணைவனாக இருப்பேன். உனக்கு என்மேல் இன்னும் நம்பிக்கை வரல... அதுதான் மௌனமாக இருக்கின்றாய். உன் மௌனம் கலையும்."
"ம்ம்.... ஓகே மதன்.... டேக் கேர் அண்ட் ரெஸ்ட்.... பை மதன்..."
"ஓகே ரதி.... பை.... டேக் கேர்.... பத்திரமாக... ஓகே ஐ மிஸ் யூ......"
விழுப்புரம் வந்ததும் ஆபீஸிற்கு கிளம்பினாள் ரதி....
"ஹாய் ரதி... ஹாவ் ஆர் யூ?"
"பைன் டி ராஜி.. நீ எப்படி இருக்க?"
"ம்ம்.. ஏதோ ரதி.. நீ இல்லாமல் கொஞ்சம் போர்... உன்னைப் பார்த்ததும் தான் ஹாப்பி...."
"அப்புறம் ரதி.. ஊர்ல திருவிழா எப்படிப் போச்சி... செம்ம ஹாப்பியா?"
"இல்லடி..."
"ஏய்... என்னடி சொல்ற ரதி..."
"ஆமா.. அங்க வந்து என் புருஷன் சண்டை போட்டான்.. நிம்மதியே இல்ல எனக்கு... அவன்கூட வரச் சொன்னான்...... ஒருவழியா அங்கிருந்து கிளம்பி வந்துட்டேன்."
"ஐயோ! ரதி... நிம்மதியாகவே இருக்க விடமாட்டாங்களா? அப்புறம் ராஜி..."
"என்னடி ரதி... சொல்லு... ஏன் தயக்கம்?"
மதனைப் பார்த்தது.. மதன் தன்னிடம் பேசியது, கேட்டது என்று எல்லாவற்றையும் தோழிக்கிட்ட கூறினாள்.
"ரதி... கொஞ்சமில்ல... அதிகமே யோசி. ஆண்களை நல்லா தெரிந்து கொண்டுதான் நம்ப வேண்டும். பொறுமையா விசாரிச்சிட்டு முடிவெடு ரதி..."
"அதுதான்டி... நானும் யோசிக்கிறேன். மதன் ஓகே வா? வேண்டாமா?"
(தொடரும்)