என் இதயம் முழுமையும் நிரம்பியுள்ளாய்.. அவளின் (ல்) அவன்! (11)
- ரதி தேவி
ஹாய், குட் மார்னிங் ரதி.
குட் மார்னிங், மதன்.
ரதி ஒரு குட் நியூஸ்.
என்ன...
நான் சென்னை வந்துட்டேன், ஸோ ஐ அம் ஹாப்பி. உன்னைப் பார்க்க வேண்டும் என்று என் இதயம் துடிக்கின்றது. ப்ளீஸ் சொல்லு ரதி...
ம்ம்...
ரதி நோ ம்ம்... சொல்லு. என்னைக்கு நாம் சந்திக்கலாம்?
சொல்றேன் மதன்... இந்த வார விடுமுறையில் பார்க்கலாம்...
ம்... சொல்லு ரதி... தயங்காமல் கேளு, நான் உனக்கானவன், உன்னையே உயிராய் நேசிக்கின்றவன், என் மேல் உனக்குத் தயக்கமே வேண்டாம்.
தேங்க்ஸ் மதன்... மறுபடியும் ஓர் வாழ்க்கை அமையும் போது, அது ஓர் அற்புதமானதாக அமைய வேண்டும்.
ரதி... நீ, என் உயிர்... உன் மேல் கொண்ட அன்பு என்றும் குறையாது. நீ உண்மையாக என்னிடம்... அன்பு கொண்டால் என் உயிரே உன்னுள் அடங்கும், ரதியே... உன் தயக்கம் என்னவென்று அடியேன் எனக்குத் தெளிவுபடுத்து...
இல்லை மதன்... ஏற்கனவே ஆனது போல் ஆகிவிடக்கூடாது என்று யோசிக்கின்றேன்.
நடக்காது... நிச்சயமாக நடக்காது ரதி... நம் வாழ்வு என்றும் நிலையானது. நான் உன்னை நேசிப்பது "உண்மை"... உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை என் வாழ்வில்... ரதியே... என் மேல் நம்பிக்கை வர, நான் என்ன செய்யணும்?
ரதி ஐ லவ் யூ... என் இதயம் முழுமையும் நிரம்பியுள்ளாய். உன்னைப் பார்த்த முதல் சந்திப்பிலேயே, உன் கண்களால் என்னைச் சிறைபிடித்து விட்டாய்.
உன் கண்களில் நான் தெரிந்தேன் என் இதயத்தில் உன்னை வைத்துள்ளேன் ரதியே... உன் மடி ஒன்று போதும் என் வாழ்நாள் முழுக்க... உன் காலடியில் நான் தவமிருப்பேன். ரதியின் தரிசனம் எப்போது கிடைக்கும்?
(தொடரும்)