என் ரதி எனக்கு கிடைக்க வரம் கேட்கிறேன்.. அவளின் (ல்) அவன்! (8)

Su.tha Arivalagan
Apr 07, 2026,02:03 PM IST
- ரதிதேவி

ரதி பதில் எதுவும் சொல்லாமல் போனை கட் செய்தாள். 

போனை மேசையில் வைத்து விட்டு நாற்காலியில் அமர்ந்தவள், மதன் நமக்கு ஓகேதானா, அவனைப் பற்றிய முழு விவரங்கள் ஏதும் தெரியாமல் எப்படி? பதில் சொல்ல முடியும், என்றவாறு யோசித்துக் கொண்டு இருந்தாள்.

ஆனாலும், மதனின் கண்கள் அவளின் இதயத்திற்குள் ஆழமாகப் பதிந்திருந்தது. கண்ணை மூடினாலே அவனின் கண்கள் அவளை இழுத்தது. கண்களை மூடி, சாய்ந்து கனவுலகில் மிதந்து கொண்டிருந்தாள்.

ரதியின் அம்மா... வந்தார்,

ரதியை குலுக்கி...

ரதி... ரதி...
என்னம்மா... சொல்லு
என்ன ஆச்சு, ஏதோ யோசிக்கிறாய்?



ஒன்றுமில்லை அம்மா...
அம்மா... நாளைக்குத் தான ஊருக்குக்
கிளம்புறோம்...
ஆமா ரதி.....

சரிம்மா...
அம்மா... கோவிலுக்குப் போலாமா?

வா... ரதி போலாம், போகலாம்.....

என்றைக்கும் இல்லாதது போல், ரதி இன்னைக்கு அழகாகக் கிளம்பினாள். அவளுக்குப் பிடித்த கலரில் பட்டுச்சேலை
கட்டி, தலை நிறைய இல்லையென்றால் கூந்தலின் அளவுக்கு மல்லிகைப்பூ வைத்து அலங்கரித்தாள்.

கண்ணாடி முன் நின்று தன்னையே ஒரு நிமிடம் பார்த்தாள். ரதி தானா? என்று  அவளையே கேட்டுக் கொண்டாள்.

ரதி கிளம்பிட்டியா?
இதோ வரேன் மா...

போனைக் கையில் எடுத்தாள்

வாட்ஸ் அப்பில் மதனின் மெசேஜ்
ரதி... ஹலோ...
ம்ம்... ஹலோ மதன்

ரதி... தவறாகக் கேட்டிருந்தால் சரி...
நோ பிராப்ளம் மதன்...

ரதி... வாட் டூ யூ?
கொஞ்சம் வெளியே கோவிலுக்கு...

சூப்பர் ரதி... எனக்காக வேண்டிக் கொள்... என் ரதி எனக்கு கிடைக்க வரம் கேட்கிறேன் என்று....

ம்ம்... என்று அனுப்பினாலும் ரதியின் மனதில் என்னவோ ஓர் இனம் புரியாத உணர்வு...

ரதி....
ம்ம்... சொல்லுங்க மதன்

ரதியின் தரிசனம் கிடைப்பது எப்போது? என் ரதியின் கரம் பிடித்து என் வரம் கேட்கும் நாள் எப்போது?
ம்ம்... ம்ம்...

ரதி... நீங்க எப்போ ரிட்டன் கிளம்புறீங்க விழுப்புரத்துக்கு. 
நாளை மதன்... நீங்க எப்போ?
இரண்டு நாள் கழித்து கிளம்பணும்.

ஓகே மதன்... வரேன் அப்புறமா...

ஓகே ரதி... ஐ அம் வெயிட்டிங் ரதி...

ம்ம்... ம்ம்...

ஏய் ரதி...
சத்தம் கேட்டு திரும்பினாள்... அவளின் கணவன், என்னடி... நேர்ல வந்துட்டேனு பார்க்கிறீயா? நீ இப்போ என்கூட வரணும்.

முடியாது... உன்னோடு வர முடியாது.
ஏன் முடியாது?...

உன் கொடுமைத் தாங்காமல் தான் நீ கட்டிய தாலி கூட என் கழுத்தில் இல்லை. உன்னோடு வர முடியாது.
அம்மா... சொல்லுமா... அவனைப் போ சொல்லு.....

இங்க பாரு... என் பொண்ணு இனிமேல் வர மாட்டா... அவளை விட்டுடு....

நான் விடமாட்டேன்... பேசிக் கொண்டே இருக்கும்போது தெருவில் கூட்டம் கூடி விட்டது.....

ஒவ்வொருத்தரும் ஒவ்வொன்றாகக் கேட்க ஆரம்பித்தனர். கேட்பதைக் கேட்க முடியாமல் ரதி அழுதுகொண்டே வீட்டிற்குள் சென்று விட்டாள்.

ரதியின் அம்மா கையெடுத்துக் கும்பிட்டு... தயவுசெய்து இங்கிருந்து போய் விடு.....

கூட்டம் கலைந்தது.

ரதியின் அலங்காரமும் கலைந்தது. ஒவ்வொன்றையும் வீசி எறிந்தாள். அதைப் பார்த்த அம்மா பதறினாள். 

வேண்டாம் ரதி... அழாத... அழாத...
அம்மா... இங்கு இருக்க வேண்டாம்
உடனே கிளம்புவோம்...
சரி மா... நாளைக்கிதான் டிரெயின்...
இப்ப எப்படி போறது,

ம்ம்... ம்ம்...

ரதி அழுது கொண்டே சுருண்டு படுத்துக் கொண்டாள். அவளின் அம்மா, அவளின் கூந்தலை தடவிக் கொடுத்தும்... தலையை தடவிக் கொடுத்தும் ஆறுதல் கூறினாள்... ஆனாலும் ரதியின் கண்ணீர் துளிகள் மட்டும் நின்றபாடில்லை.....

அப்படியே கொஞ்ச நேரம் அயர்ந்து உறங்கித்தான் போனாள்.....

ரதி... ரதி...
அம்மா எழுப்ப, கண் விழித்தாள்...
எழுந்திரும்மா...
ம்ம்.. சொல்லும்மா.. உன் போனில்
ரொம்ப நேரமா சத்தம் கேட்குது.....

(தொடரும்)