விநாயகா! எனக்கென் குறை.. அழகிய சிங்கரின் என்பா!
Sep 17, 2026,10:42 AM IST
பூலோகத்தில் யாவருக்கும் பொன்னைய தெய்வமிது.
பேராதரவாய் மாதா பிதா குரு வென
என் மனதில் நீர் குந்தியிருக்க;
விநாயகா! எனக்கென் குறை?
நல்லோசை தரும் வாணி, நீர்
தலை அசைக்க,
நாவிலே அமர்ந்தாள்!
நான்முகனும் தலையெழுத்தை மாற்றி எழுத;
விநாயகா! எனக்கென் குறை?
செந்திருவும் செல்லாதிருப்பாள்;
என்னில்லம் விட்டு.
செஞ்சடையான் பாகத்தாளும்
பிரியாதிருப்பாள்; என்னிடம்.
வெண்மலராள் குடியிருப்பாள் நின் அருளால்.
விநாயகா! எனக்கென் குறை
வேண்டும் அத்தனையும் விரும்பியே தர,
வேறென்ன வேண்டும்; சொல்; நீரே!
விநாயகா! எனக்கென் குறை?
கடல் கடந்தே நீர் சென்று,
உன் ஆடல் அங்கு நடத்த;
என் ஆணை உனக்கு; என்றேன்!
விநாயகா! எனக்கென் குறை