வரலக்ஷ்மி வரம் அருள்வாய்!

Su.tha Arivalagan
Aug 22, 2026,09:55 AM IST

- அழகிய சிங்கரின் என்பா


வேண்டும்;  என்று வேண்ட ஒன்றுமில்லை!  

வேண்டாது  இருக்க முடியவும் இல்லை?

வேண்டுவது நீயே அறிந்து, பரிந்தருள்வாய்!

வரலக்ஷ்மி வரம் அருள்வாய்


--


சஞ்சல புத்தி அகன்றிட நான்

தஞ்சமென  உன்னை நாடி அடைந்தேன்!

வஞ்சனை  கொஞ்சமும் இன்றி எந்தனுக்கு,  

வரலக்ஷ்மி வரம் அருள்வாய்


--




மிடி ஒன்றுமில்லாமல்

செந்தாமரை விட்டு,  

என்  மனத்தாமரை நீ குடிபுகுவாய்;

படிப்படியாக என் பழவினை  அறுக்க,

வரலக்ஷ்மி வரம் தருவாய்.


--


செய்யும் செய்கைக்கு உருவம் தா!

புரியும் வினைக்கு வெற்றி தா!

செய்யும் நோக்கத்திற்கு புகழ் தந்தே

வரலக்ஷ்மி வரம் அருள்வாய்


--


வருவதும் போவதும்  உன் சித்தம்!

உன் விருப்பம் போலதே நடக்கட்டும்!

செல்வத் திருமகளுன்  சித்தத்தில் நானுறை

வரலக்ஷ்மி வரம் அருள்வாய்