இட்லி மாதிரி.. குழியில் விழுந்தாலும் கும்முன்னு எழுந்து வரணும்!

Su.tha Arivalagan
Feb 05, 2026,04:35 PM IST
- கவிநிலவு சுமதி சிவக்குமார்
 
இட்லி மாதிரி பளிச்சுனு சிரிச்சு கிட்டே இருக்கணும்
குழியில விழுந்தாலும் கும்முன்னு எழுந்து வரணும். 
புரட்டி போட்டாலும் தோசை மாதிரி பொறுமையா இருக்கணும் 
உள்ள ஒன்னுமே இல்லைன்னாலும்
பூரி மாதிரி மகிழ்ச்சியில உப்பி இருக்கணும்
அடை மாதிரி எல்லாருக்கும் பிடிச்சவங்களா இருக்கணும் 
ஓட்டையா இருந்தாலும் மெது வடை மாதிரி கவர்ச்சியா இருக்கணும். 



உப்புமா மாதிரி அவசரத்துக்கு கை கொடுக்கணும். 
பொங்கல் மாதிரி குழைவா பேசணும். 
அடிச்சி துவைச்சாலும் பரோட்டா மாதிரி தாக்கு பிடிக்கணும். 
பிரியாணி மாதிரி famous ஆக இருக்கணும். 
சப்பாத்தி மாதிரி எளிமையா இருக்கணும். 
ஜிலேபி மாதிரி சுத்தி வளைச்சு பேச கூடாது.
நூடூல்ஸ் மாதிரி சிக்கல் வருமாறு நடக்க கூடாது.
பீஸா மாதிரி இழுபறியா இருக்க கூடாது.

ஆப்பம் மாதிரி தொப்பையோட இருக்க கூடாது.
புட்டு மாதிரி உள்ளதெல்லாம் கொட்டக் கூடாது.
கேசரி மாதிரி இனிமையா பேசணும். 
பாயசம் மாதிரி விசேஷமா இருக்கணும்.
அப்பளம் மாதிரி ஆறுதலா இருக்கணும். 
அவியல் மாதிரி ஒற்றுமையா இருக்கணும்.
புரூட் சாலட் மாதிரி சக்தியோட இருக்கணும்.
ஐஸ் கிரீம் மாதிரி cool ஆ இருக்கணும்.
டிகிரி காபி மாதிரி நம்ம வாழ்க்கை மணக்கணும்.

(சுமதி சிவக்குமார்.. B. A., M. com., (co-op mgt)., M. A ., (yoga) ., DOM., (computer)., . கள்ளக்குறிச்சி மாவட்டம் மூஙகில்துறைப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது ஊரில் ஏரிக்கு நீர் கொண்டு வர இணையும் கைகள் என்றொரு அமைப்பை ஏற்படுத்தினார் உயர்திரு அப்துல் ரஹீம் அவர்கள். நீர் நிரம்பி இருமுறை கோடி போனது. அதனால் கோமுகி நதியை வாழ்த்தி‌ நடந்தால் வாழீ கோமுகி என்ற கவிதையை பதிவிட்டார் சுமதி சிவக்குமார். முகநூலில் நிறைய கவிதை தளங்களில் கவிதைப் போட்டி நடுவராகவும் கவியரங்கம் தலைவராகவும் திகழ்கிறார். கிட்டத்தட்ட 3000 சான்றிதழ்கள் 50 ஷீல்டுகள் பரிசு பெற்றுள்ளார். நாட்டுப்புற பாடல் எழுதி பாடவும் செய்வார். மதியின் மதி என்ற கவிதை புத்தகம் , தெம்மாங்கு பாடலா என்ற நாட்டுப்புற பாடல்கள் புத்தகம் வெளியிட்டுள்ளார்.  சின்னசேலம் கண்ணதாசன் கலை இலக்கிய பேரவையின் செயலாளராக செயல்படுகிறார்)