இயல்பாய்.. எளிமையாய் இருப்பது.. (Being Ordinary and Simple)

Maitreyi Niranjana
Feb 14, 2026,01:06 PM IST

- மைத்ரேயி நிரஞ்சனா


காஷ்முஷ் ஒரு குருவிடம் சென்றார்.. அவருக்கு ஒரு கேள்வி இருந்தது.. அவர் குருவிடம் கேட்டார்..


நான் சாதாரணமாய் இருக்க விரும்புகிறேன்.. சந்தோஷமாக இருக்க விரும்புகிறேன்..

எனக்கு அன்பு செய்ய ஒரு பெண் வேண்டும் என் மேல் அன்பு காட்ட அவள் வேண்டும்..

என்னுடைய நேரத்தை உற்சாகமாக செலவழிக்க எனக்கு நண்பர்கள் வேண்டும்..

எனக்கு ஞானோதயம் (Enlightenment)எல்லாம் தேவையில்லை.. நான் உங்களிடம் வந்தது தவறா?

என்று கேட்டார்..


குரு பேச ஆரம்பித்தார்.. 




உனக்கு ஞானோதயம் பற்றி தவறான விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன..

நீ சாதாரணமா இருக்க சந்தோஷமா இருக்க.. உண்மையிலேயே மனதில் காதல் கொள்ள.. உண்மையிலே நண்பர்கள் உனக்கு கிடைக்க.. உனக்கு ஞானோதயம் அவசியம் வேண்டும்..


ஒரு சாதாரண மனிதனால் மட்டுமே உண்மையான அன்பு செலுத்த முடியும்.. உன்னால் அன்பு செலுத்த முடியவில்லை என்றால் உனக்கு எப்படி அன்பு செலுத்தும் பெண் கிடைப்பாள்? 


காதலர்கள் உடன் இருக்கும் போது அங்கு இருவர் இல்லை.. அங்கு காதல் மட்டுமே இருக்கும்.. வெளியில் இருந்து பார்க்க இருவராக தெரிந்தாலும்.. இருவரும் சாதாரணமாக ஒன்றுமில்லாத தன்மையுடன் (அது தான் உன்னுடைய உண்மையான state) இருக்கும் போது அங்கு இருவரும் மறைந்து காதல் மட்டுமே இருக்கிறது..


நீ ஏதோ ஆக வேண்டும் என்று ஓட்டத்திலேயே இருந்தால்.. நிச்சயமாக காதலிக்க முடியாது.. காதல் என்பது இந்த சனத்தில் இருப்பது.. அதற்கு இறந்த காலமோ எதிர்காலமோ குறிக்கோள்களோ கிடையாது..


பெரிதாக எதுவும் சாதிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டே இருப்பவனுக்கு..(who is always trying to be somebody) குறிக்கோள்கள் ஒன்று முடிக்க மற்றொன்று வரும்.. That's an endless journey.. 


உன்னுடைய உள்தன்மை ஒரு வெற்றிடம்.. Nothingness..A vast space.. இதை உணராமல் நீ எது என்னவென்று கற்பனை பண்ணிக் கொண்டிருக்கிறாயோ.. அந்த நிலையில் இன்னொரு பெண்ணை சந்தித்தால் அவளும் அதே நிலையில் இருந்தால்.. அங்கு 4 பேர் இருப்பார்கள்.. காதல் எங்கே இருக்கும்? 


அப்படி இருவரும் இருக்கும் போது எப்போதும் டென்ஷன் தான் இருக்கும்.. அதற்கு பெயர் நீ சொல்வாய் காதல் என்று! 

நான் என்பது தான் எல்லா பிரச்சினைகளுக்கும் காரணமாக இருக்கிறது..


ஆங்கிலத்தில் இரு வார்த்தைகள் உள்ளன.. ஒன்று Obvious (Latin root) மற்றொன்று Problem (Greek root).. இவை இரண்டுக்குமே Latin மற்றும் Greek ல் ஒரே அர்த்தம் தான்.. எதிரே உள்ள..(In front of )


என்ன பிரச்சனை.. சந்தோஷம் இல்லாமைக்கு என்ன காரணம்.. யார் காரணம் என்பதை உண்மையிலேயே பார்க்க ஆரம்பித்தால்.. 


வாழ்க்கையின் வெளிப்புற சூழல்கள் அதே இருந்தாலும்.. சந்தோஷம் இல்லாத தன்மை காணாமல் போய்.. சந்தோஷம் மட்டுமே இருக்கும்.. காதல் மட்டுமே இருக்கும்.. நட்பு மட்டுமே இருக்கும்.. கொண்டாட்டம் மட்டுமே இருக்கும்..


Valentine's Day Wishes to All..


நாம் தொடர்வோம்…


மைத்ரேயி நிரஞ்சனா.. எழுத்தாளர், பேச்சாளர், பாடகி என பன்முகத் திறமையாளராக வலம் வருகிறார். இல்லத்தரசி என்ற நிலையிலும் சிறந்து விளங்குபவர். மதுரையில் பிறந்தவர், சேலத்தில் வசிப்பவர். அடிப்படையில் ஒரு பொறியாளர். கடந்த 15 வருடமாக ஆன்மீகம் மற்றும் தியானத்தில் அதிக ஈடுபாடு. ஒரே மனித குலம் அமைய வேண்டும் என்ற கனவுடன் வலம் வருபவர்.  ஆன்மிகம் மட்டுமே மனிதகுலத்தை பயமற்ற, போட்டியில்லாத புதிய உலகிற்கு அழைத்துச் செல்லும், அங்கு பணம் மற்றும் போட்டிக்குப் பதிலாக அன்பு மட்டுமே அடிப்படையாக இருக்கும். பொறுப்புடன் கூடிய சுதந்திரமே புதிய மதமாக இருக்க வேண்டும் என்பதில் நம்பிக்கை கொண்டவர்.