வெத்தலை வெத்தலை வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ... உடம்புக்கு ரொம்ப நல்லதுங்க!
- ஸ்வர்ணலட்சுமி
வெற்றிலை அதாவது Betel leaves நம்மோட உடல் ஆரோக்கியத்திற்கு நிறைய நல்லது செய்யுது. அதைப் பத்தி இப்போது தெரிஞ்சுக்கலாம்.. அது மட்டுமல்ல, ஏன் வெற்றிலை என்று பெயர் வந்தது, என்பதையும் தெரிந்து கொள்வோம்.
வெற்றிலை நம் வீடுகளில் அனைத்து விசேஷங்கள் பூஜைகள், பூஜைகள் நல்லவை நல்லவை அல்லாத விஷயங்களுக்கும் முதன்மையாக இருக்கிறது. நம் முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு உணவு பொருள்களிலும் ஒவ்வொரு விதமான விஷயங்களும் ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன.
பாட்டி தாத்தா தான் வெற்றிலை பாக்கு போட வேண்டுமா ?என்றால் இல்லை ,அனைவரும் வீட்டிலே சேர்த்துக் கொள்வது அவசியம். இதற்கு ஒரு சிறிய கதை உண்டு. வெற்றிலை என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியுமா?... தெரியாதவர்களுக்கு இந்த பதிவு .ஒரு சமயம் காஞ்சி மடத்தில் மகா ஸ்வாமிகளை சந்திக்க ஒரு மாணவன் வந்தான் அவனை சுவாமிகள் என்ன படிக்கிறாய்? என வினவினார் அவன் தாவரவியல் படிப்பதாக கூறினான் .உடனே சுவாமிகள் தன் முன்வைத்த தட்டில் இருந்த பழம் ,வெற்றிலை பாக்கு இவற்றை காட்டி இதில் உள்ள இலையின் பெயர் என்ன ?என்று கேட்டார் அதற்கு மாணவன் உடனே வெற்றிலை என்று கூறினான்.
சுவாமிஜி இதற்கு வெற்றிலை என்று ஏன்? பெயர் வந்தது என்று கேட்டார் .மாணவனும் அங்கு இருந்த அனைவரும் திகைத்தனர். அதற்கு பதில் சுவாமி கூறியதாவது:- பெரும்பாலான உட்கொள்ளக்கூடிய எல்லா கொடிகளும் பூ பூக்கும், காய் காய்க்கும் ஆனால் இந்த வெற்றிலை கொடி பூக்காது காய்க்காது.
உட்கொள்ளக் கூடியது வெறும் இலை மட்டுமே. அதனால் தான் அது வெற்று இலை பிறகு வெற்றிலை என்று ஆகிவிட்டது என்று கூறினார் .மாணவன் நன்றி கூறி இத்தனை நாட்கள் இது தெரியாமல் போனதே என்று எண்ணி சுவாமிகள் இடமிருந்து விடைபெற்றான்.
வாங்க இப்பொழுது வெற்றியின் நன்மைகள் பற்றி பார்ப்போம் .அடடே.. இவ்வளவு நன்மை இருக்கிறதா!...
1. வெற்றிலையில் தாயாமின் *நியாசின் ரிபு பிளேவின் கரோட்டின் *கால்சியம் *அயோடின் *பொட்டாசியம் *வைட்டமின் ஏ ,பி ,பி 2 நீ கோடி நிக் அமிலம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
2.வெற்றிலை உண்பதால் சளி ,இருமல், செரிமான பிரச்சனைகள் ,வாய் துர்நாற்றம் ,பல் வலி ,ஈறு வலி மற்றும் வாய்வழி தொற்றுகளை நீக்குகிறது.
3. காயங்கள் ஆற்றும் சரும அழற்சி மற்றும் அரிப்பு குறைகிறது
4.குடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.
5. இது ஒரு வலுவான ஆண்டி ஆக்சிடென்ட் ஆகும் .இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்து போராட உதவுகிறது.
6. இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. நீரிழிவு நோயை நிர்வகிக்கவும் உதவுகிறது.
கல்யாண விருந்து களில் மற்றும் நான்வெஜ் பிரியாணி சாப்பிட்டாலே சாப்பிட்ட பிறகு வெற்றிலை பீடா போடுவது அனைவருக்கும் பிடிக்கும் இல்லையா!...
இது நமக்கு செரிமான பிரச்சனைகளை குறைக்க உதவுகிறது. மேலும் வெற்றிலை பயன்படுத்தி பல ரெசிபிகள் செய்யலாம்... இதற்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் . உங்கள் ஸ்வர்ணலட்சுமி.