உன் விழியிலே சக்கரசுழல் கண்டேன் .. ஆண்டாள் திருக்கல்யாணம்!
Apr 02, 2026,01:10 PM IST
-பா.பானுமதி
மார்கழி பாடி உன்னை மணந்து கொண்டேன் மாதவா
நோன்பு இருந்து உன்னுடன் சேர்ந்து கொண்டேன் ஸ்ரீதரா
பாவை பாடி உன்னை கவர்ந்து விட்டேன் பரந்தாமா
வாரணம் ஆயிரம் பாடி உன்னை வணங்கினேன் வரதா
உன்னைச் சேர ஏங்கினேன்
ஊண் உறக்கமின்றி மூச்சு வாங்கினேன்
உயிரைப் பிரிந்து உடலை தாங்கினேன்
உன்னை மணந்து மணம் வீசினேன்
உன் விரல் பிடித்து வலம் வந்தேன்
உன் விழியிலே சக்கரசுழல் கண்டேன்
உன் மொழியிலே சொக்கி விழுந்தேன்
பள்ளி கொண்ட நாதா
உன் பாதத்தில் இடம் கொண்டு பரம சுகம் கண்டேன்
இந்த நாளுக்காக தான் இத்தனை நாளும் வாழ்ந்தேன்
உன்னை சேர தானே ஒவ்வொரு நாளும் வளர்ந்தேன்
எனை ஆளும் சுற்றம் நீயே இனி நான் உறங்கா
என் கொற்றமே கோபாலா கோவிந்தா
பங்குனி உத்திரத்தில் பைந்தமிழர் உன்னை பாடினேன்
பங்கையர் கண்ணா!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)