தைரியம்!
Feb 01, 2026,01:07 PM IST
- பா. பானுமதி
அடிமைத்தனத்துக்கு
சங்கு ஊதும்
கொடுமைகளை
பங்கு பிரிக்கும்
உடைமைகளை
உறுதியுடன் எடுக்கும்
உரிமைகளை
அறுதி யிட்டு கூறும்
அச்சத்தை வேரோடு
சாய்க்கும்
மிச்சத்தை தேரோடு
இழுக்கும்
சொச்சம் என்ன சொர்க்கமாய்
இருக்கும்
சண்டைகளை மண்டியிடச்
செய்யும்
போர் என்றாலும் புது தெம்பு
கொள்ளும்
வம்பு வழக்குகளை வறுத்து
தள்ளும்
கொம்பு சீவியது போல் வீரத்துடன்
வெல்லும்
கலவரத்தை கட்டுக்குள்
வைக்கும்
நிலவரத்தை நேர்படுத்தி
நிற்கும்
வாழ்க்கைக்கு வழிகாட்டியாகும்
கலக்கத்தில் கலங்கரை விளக்கமாகும்
தைரியமே தன்னம்பிக்கையின் முதல் படி
தலை நிமிர வைக்கும் வரிசை படி
வாழ்க்கைப் பாதையில் தைரியத்தின் துணைக்கொள்
தலை நிமிர்ந்து எதையும் எதிர்கொள்