எதிர்க்கொள்!

Su.tha Arivalagan
Feb 04, 2026,01:02 PM IST

- பா.பானுமதி


எது வந்தாலும் எதிர்க்கொள்...

நல்லன எனில் ஏற்றுக்கொள்...

அல்லன எனில் தட்டிச்செல்...

எதிர் கொண்டால் தான் எல்லாம் விளங்கும்...

இல்லாவிட்டால் எப்படி துலங்கும்...

விருப்பம் இருந்தால் ஏற்றுக் கொள்...

திருப்பம் தந்தால் போற்றிக்கொள்...

பிடித்து இருந்தால் பிணைத்து கொள் 




உடைத்து இருப்பினும் இணைத்து கொள்...

துடைத்து விட்டால் தூர செல்...

எதிர் கொண்டால் தான் ஏற்ற இறக்கம் புரியும் 

எதிர் கொண்டால் தான் அடுத்த கட்டம் விளங்கும் 

எதிர் நீச்சல் தான் கரை சேர்க்கும் 

எதிர் கொண்டால் தான் எதுவும் தெரியும்...

இல்லாவிட்டால் என்று விடியும்...


வலிகள் இன்றி வழிகள் இல்லை... 

சுவடுகள் இன்றி வரலாறு இல்லை... 

தழும்புகள் யாவும் நீ வென்ற சாட்சி... 

தன்னம்பிக்கை ஒன்றே உந்தன் மீட்சி...


இருளைக் கண்டு அஞ்சாதே - 

அதுதான் வெளிச்சத்தின் வாசலை காட்டும்... 

துணிந்து நில் - 

உன் நிழலும் கூட உனக்கு வழி காட்டும்!


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)