இதற்கு மேல்....!

Su.tha Arivalagan
Jan 11, 2026,12:02 PM IST

- பா. பானுமதி


போதும் மட்டும் பொன் கிடைத்துவிட்டால் 

பொங்கி வழிகிறது மகிழ்ச்சி 


விரும்பும் பெண் மட்டும் துணையாகி விட்டால் 

துள்ளி எழுகிறது நெகழ்ச்சி


வேண்டும் வேலை கிடைத்து விட்டால் 

விண்வரை எகிருது வளர்ச்சி


வீடு மனை சொத்து சுகம் அமைந்துவிட்டால் 

விரைந்து வருது புகழ்ச்சி 


ஆட்சி அதிகாரம் அனைத்தும் அமைந்துவிட்டால் 

அதன் பின் ஏது இகழ்ச்சி




பணம் புகழ் பெண் வீடு மனை சொத்து சுகம் என 

எவ்வளவு அமைந்தாலும் அமைதி அடையாத மனம் 

இவ்வளவு இருந்து என்ன இதற்கு மேல் என்ன இருக்கிறது என்று 


தேடி ஓடி ஆடி அலைகிறதே தவிர 

அமைந்துவிட்டதில் அகம் மகிழ்வு கொள்வதில்லை 


இன்னும் இன்னும் என்று சென்று கொண்டிருந்தால்.. 


இருப்பதை என்று ரசிப்பாய் புசிப்பாய் வசிப்பாய் 

யோசி மனமே யோசி 


இது போதும் என மனதுக்குள்ளே வாசி 

அதுவே இறைவனின் ஆசி....