பற்றுகள் பற்றிக் கொண்டிராமல் சற்று பற்றற்று இரு!
Jan 19, 2026,01:02 PM IST
- பா. பானுமதி
அற்றுகள் அற்றி தள்ளாது
சற்று தெற்றி இரு
புற்றுகளில் புகுந்து கொள்ளாமல்
சற்று நெற்றி நிமிர்
விற்றுகள் விரித்துக் கொண்டிடாமல்
சற்று நிறுத்திக் கொண்டிரு
மற்றுகள் மட்டுப்படாமல்
சற்று ஒற்றி இரு
தீற்றுகள் தீற்றிக்கொண்டிராமல்
சற்று ஆற்றிக் கொண்டிருக்கும்
மாற்றுகள் மாற்றிக் கொண்டிடாமல்
சற்று தேற்றிக்கொண்டிரு
சுற்றுகள் சுற்றிக்கொண்டிராமல்
சற்று உற்று நோக்கி கொண்டிரு
வெற்றிகள் வற்றிடாமல்
ஏற்றி கொண்டிரு!