இடத்தைப் பொறுத்து பெயர்...!
Feb 19, 2026,12:00 PM IST
- பா. பானுமதி
தங்கம் விலை ஏறும்போது பல இடங்களில் பதுக்கி வைத்தால்
பல கோடிக்கு சொந்தக்காரன்
தங்கம் விலை ஏறுதே என்று கடையில் வாங்கி
வீட்டிற்குள் கொண்டு வந்து வைத்தால் பணக்காரன்
வீட்டுக்குள் இருக்கும் தங்கத்தை கொண்டு சென்று
வங்கியில் வைத்தால் நடுத்தர வர்க்கம்
கழுத்திலும் காதிலும் கைகளிலும் பூட்டிக் கொண்டால்
தங்கப் பெண்
கடையிலே இருக்கட்டும் என்று விட்டு வைத்தால்
மேல் வர்க்கமோ நடுத்தர வர்க்கமோ அல்ல
ஏழை மற்றும் எளியவன்
இடத்தை வைத்து நிலை பிரிக்கப்படுகிறது
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)