இயல்புகள் இழக்காதே!

Su.tha Arivalagan
Nov 10, 2026,11:04 AM IST

- பா. பானுமதி


காரியம் ஆனதும் தூக்கி எறிந்ததற்காக கலங்குவதில்லை 

கருவேப்பிலை 


வேலை முடிந்ததும் வீட்டுக்கு வெளியே எறிந்ததற்காக வேதனைப்படுவதில்லை 

வாழைமரம் 


சாப்பிட்டு முடித்ததும் சந்தியில் எறிந்ததற்காக சங்கடப்படுவதில்லை 

வாழையிலை


மாளிகை கட்டி முடிக்கும் வரை சாரங்கள் தேவைப்படும் முடிந்த பின் 

மறைக்கப்படும்


எது வேண்டுமானாலும் எப்படியாவது இருக்கட்டும் 

யார் வேண்டுமானாலும் எப்படி எனும் மாறட்டும் 




நீ மட்டும் மாறாமல் இரு

நல் இயல்புகளை இழக்காமல் இரு


இயல்புகள் இதயத்தில் இருந்து வருபவை 

நெருக்கடியில் இசைவுகள் இல்லாவிட்டாலும் 

நிச்சயமாய் அசையும்


நல் விதைகள் நல் விருச்சங்களை தருவது நிச்சயம் 

விதை இல்லா வாழ்க்கை சிதை மேல் நடக்கும் 


கதைகள் எவ்வாறாயினும் 

அதையெல்லாம் அக்கறை கொள்ளாமல்


பதை பதைப்பின்றி பக்குவமாய் நடந்து கொள் 

நல்லன நல்லவற்றையே செய்யும் 


பொறுமை பலன் தரும் 

திறமை வரம் ஆகும் 

கடமை காலத்திற்கும் நிற்கும்


விட்டுக் கொடுப்பதால் வெளிச்சம் வரும் 

நிதானம் இருப்பதால் நிம்மதி தரும்


நல்ல இயல்புகளே இவ்வுலகம் இயங்குவதற்கான நல்ல அணியாகும்!


(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், சொற்பொழிவாளர். மதுரையைச் சேர்ந்தவர்)