வேரின் விசேஷம்!
- பா.பானுமதி
வேர் தன்னை வெளிப்படுத்தாது...
விழிகளுக்கு புலப்படாது...
மொழிகளுக்கு அக படாது...
தண்டை தாங்குவதே தலையான வேலையாக கொண்டது
இலைகளையும் கிளைகளையும் இறுக்கிப் பிடிக்கும்
நீர் கொடுத்து நேராக்கி தேராக்கும்
விலகி இருந்தாலும் விட்டுக் கொடுக்காது
அடியில் அல்லல் பட்டாலும் அரவணைக்கும்
விருச்சத்தை விருப்பமாய் பசுமையாக்கும்
தனக்கென வாழாமல் தாங்குவதற்கென்றே வாழும்
வண்ணங்களை வளர்ச்சியை கொடுக்கும்
வெளிச்சத்தை பார்க்க விட்டாலும் வாழ்வை கொடுக்கும்
நிலத்தடியில் இருந்தாலும் உயரத்தை தரும்
வலிமையாய் இருந்தாலும்
பெருமைகளை தக்க வைத்துக் கொள்ளாது
அருமையான வேர்போல்
எத்தனையோ இவ்வுலகை இயக்குகிறது
வேர்கள் இருப்பதால் தான் உயிர்கள் உயிர்க்கிறது
உயர்கிறது...
பெற்றோர் மட்டும் அல்ல
மற்றோரும் வேர்களாக விளங்குவதால் தான்...
நாம் இன்று இருக்கிறோம்!
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)