எதார்த்த உண்மை!

Su.tha Arivalagan
Oct 21, 2026,12:44 PM IST

- பா. பானுமதி


போனால் போகட்டும் விட்டு விடு 

புதியதாய் கிடைக்கும் என நம்பி விடு 


அழகு உடைகள் தொலைந்தால் 

அடுத்தது நல்லதாய் கிடைக்கும்


நேரத்திற்கு உணவு கிடைக்க விட்டால் பாரமில்லை 

தூரத்தில் இன்னும் சிறப்பாக


உறவுகள் விட்டுப் போனால் உதறி விடு 

உண்மை இருந்தால் நிலைத்திருக்கும் 


நட்புகள் விட்டுப் போனால் நடுங்காதே 

நல்லவை கெட்டுப் போகாது 




பொருள் விட்டுப் போனால் பதறாதே 

இறைவன் அருள் இருந்தால் என்றும் சிறப்பாக 


இருள் விட்டுப் போனால் தானே 

விடியலில் வெளிச்சம் வரும் 


வேலை விட்டுப் போனால் வேதனை படாதே 

சோலையாகும் வேலை சோதனைக்கு பின்னே வரும் 


உடன் இருப்பவை விட்டுப் போனால் உள்ளம் வருந்தாதே 

உனக்குரிய வை உன்னை தொடரும் 


பட்டுப் போனவை கூட ஒரு நாள் பசுமையாகும்  

ஆனால் கெட்டுப் போனவை 


போவதெல்லாம் போகட்டும் புதியதாய் பாடம் கற்றுக்கொள்

கிடைப்பவற்றை பெற்றுக் கொள் 


எதுவானாலும் பார்த்துக் கொள்ளலாம் 

எது வந்தாலும் ஏற்றுக்கொள்


போவதை எல்லாம் விட்டுத் தள் 

வருவதையெல்லாம் தொட்டுச் செல்


(கவிஞர் பா. பானுமதி, ஆசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர். மதுரையைச் சேர்ந்தவர்)