அறிவு சுரங்கத்தை அகிலத்திற்கு அளித்த ஆதவன்.. திருவள்ளுவர்!
Jan 16, 2026,11:08 AM IST
- பா.பானுமதி
அறிவு சுரங்கத்தை அகிலத்திற்கு அளித்த ஆதவன்
ஆற்றல் களஞ்சியத்தை அள்ளிக் கொடுத்த ஆதித்யன்
இணையில்லா இலக்கியம் தந்த இமையவான்
ஈடில்லா கருத்துக்கள் இவ்வுலகக்கு அளித்த இணையற்ற புலவன்
உலகிற்கு உயர் தத்துவங்கள் தந்த உத்தமன்
ஊரையே உலகறிய செய்து அழியா புகழ் பெற்றவன்
எல்லோருக்கும் எக்காலத்திலும் ஏற்ற தீர்வுகள் தந்த தமிழன்
ஏற்றங்கள் மிக எளிமையாய் எடுத்து தந்தவன்
ஐயங்களுக்கு இடமில்லா அற்புதம் படைத்தவன்
ஒவ்வொரு தேசமும் வணங்கி வரவேற்கும் ஒளியோன்
ஓங்கி உயர்ந்த உயர் நிலை பெற்ற அருந்தவன்
ஔவைக்கு ஆத்ம நண்பன் அவர் தினம்
அவரை போற்றி அவர் அளித்த அமுதம் பருகி வாழ்வோம்...!