போர்...நடந்தால்...!
Mar 05, 2026,02:47 PM IST
- பா. பானுமதி
சீர் கெட்டுப் போய்விடும்
ஊர் உடைந்து போய்விடும்
நாராக கிழிந்து விடும் வாழ்க்கை
தேர் திருடு போய்விடும்
புண்ணாகும் உடலும் உள்ளமும்
மண்ணாகும் மனிதமும் மாட்சிமையையும்
ஊர் உடைந்து போகும் உலகம் சிதையலாகும்
நாடுகள் நசிந்து போகும்
கேடுகள் சிரித்து ஆகும்
பொருளாதாரம் பொலிவிழந்து வீழும்
வாழ்வாதாரம் வளம் குன்றி தாழும்
வாழ்வில் பேரிருள் சூழும்
அக்கால ஆயுதப் போர்களே
பெரும் அழிவை தந்தது
இக்கால தொழில்நுட்ப போர்கள்
இன்னும் பேரழிவை தரும்
போரே நீ ஒழிக புதைந்து அழிக
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)