என்ன சொல்ல...!

Su.tha Arivalagan
Jan 30, 2026,03:33 PM IST

- பா. பானுமதி


கால் கொலுசு வாங்க எண்ணி 

கால் காசுகளாக காலாண்டு சேர்த்து கடைக்கு சென்றால்....

போதவில்லை 


அரை காசுகள் என்று அரையாண்டு கழித்து போனால் 

அப்போதும் முடியவில்லை 


முழு ஆண்டும் முக்கால் காசு முழுகாசு என்று சேர்த்து கடைக்கு போனால் 


கால் கொலுசு அல்ல 

மெட்டி கூட வராதாம்...




மூக்குத்தி வாங்க பணம் சேமித்து....


கம்மல் வாங்கினால் கௌரவமாய் இருக்குமே 

இன்னும் கொஞ்சம் சேர்த்து 


கடைக்கு சென்றால் இனி அதற்கு வாய்ப்பில்லை 

விலை வாசி விண்ணை தொட்டதாம் 


கோடிகள் செலவு செய்து விண்ணை தொடும் ராக்கெட்டை விட


நடுவீதியில் உள்ள நகை 

வினாடியில் தொட்டு வரலாறு படைக்கிறதாம் 


தெருகோடியில் திண்டாடும் மக்கள் நெருக்கடி 

என்ன சொல்ல....!