யார்...?
Jan 29, 2026,05:09 PM IST
காணாமல் போன நிலா
காட்சிக்கு இல்லை உலா
விழுந்து விட்ட நட்சத்திரம்
பழுது பட்ட பொன் சித்திரம்
வறண்டு போன ஜீவநதி
அரண்டு நிற்கும் பாவமதி
பாலைவனமான பழசு
அலை வீசும் மனசு
மணம் பரப்பாத மரப்பாச்சி
ஓணம் காணாத திருப்பாச்சி
சிலை இல்லாத கோயில்
விலை போகாத வாயில்
சுனாமிக்கு சுகம் கிடைக்குமா சொல்
பினாமிக்கு அகம் சிலிர்க்குமா நில்
வசந்தம் தொலைத்த வருடம்
கோடை கொளுத்தும் ஆருடம்
உதிர்காலமே உறவு
எதிர்காலம் காட்டுமா பரிவு
கோலமில்லா வாசல்
கொண்டாட்டம் இல்லா வீடு
இமயம் இல்லா இந்தியா
உமையாள் இல்லா இறைவன்
வானவில் இல்லாமல் மழை
வழக்கமாய் வரும் பிழை
யார் தான் விரும்பும் வெறுமை
ஏன் தான் இந்த கடுமை
பூக்கள் பூக்காத பூமி
புன்னகை இல்லாமல் சாமி
ஆயுதம் இல்லாமல் அதிரடி
காகிதம் கொண்டு சரவெடி
பூஞ்சோலையில் வீசும் புயல்
புல் தரையில் விழுந்தது கயல்