பெண்ணுக்கு பேருதவி.. எது தெரியுமா?

Su.tha Arivalagan
Jan 23, 2026,10:23 AM IST

- பா.பானுமதி


பெற்றோர் உதவி பெரிதாய் கிடைத்து விடுவதில்லை 

மற்றோர் உதவி மறந்தும் அமைவதில்லை 

உற்றார் உதவி உருப்படியாய் இருப்பதில்லை 

உறவினர் உதவி ஒருநாளும் கிடைப்பதில்லை 

உடன் பிறந்தார் உதவி கிடைத்திட இயலுவதில்லை 

கணவரின் உதவி அனைவருக்கும் அமைவதில்லை 

பிள்ளைகள் பெரிதாய் உதவிட முனைவதில்லை




காலத்திற்கும் கை கொடுப்பது தந்தை தந்த கல்வி 

கல்வியை மட்டும் கட்டிக்கொண்டால் 

கடைசி வரை இல்லை கேள்வி 

காலத்திற்கும் உதவுவது கல்வி அன்றி வேறில்லை

வேலை இன்றி வேறு எதுவும் 

அவளுக்கு உதவுவதில்லை

அவளை உயர்த்துவதுமில்லை 

கல்வியே கடவுளாய் அமைந்து விடுகிறது காரிகைகளுக்கு 

காலத்திற்கும் உதவுவது கல்வியே அன்றி வேறில்லை