முத்தமிழ் அறிந்தால் முன்னேற்றம் காணலாம்!
Feb 21, 2026,03:21 PM IST
- பா.பானுமதி
தேன் தமிழ் கற்றால் தெம்மாங்கு பாடலாம்
காவியத்தமிழ் கற்றால் கதைகள் எழுதலாம்
கன்னித்தமிழ் பயின்றால் கவிதைகள் படைக்கலாம்
பைந் தமிழில் பேசினால் பரவசம் அடையலாம்
முத்தமிழ் அறிந்தால் முன்னேற்றம் காணலாம்
தமிழ் உன்னை தலை நிமிர்த்தும்
அன்னை தமிழ் அழகு சேர்க்கும்
பிள்ளைத்தமிழ் பெருமை காட்டும்
அருந்தமிழ் அகிலத்தின் கண்ணாடி
செந்தமிழ் சிறப்புகளின் உயிர்நாடி
விண்மீன்களை வீழ்த்தும் தமிழ்
நவரத்தினங்களை காட்டிலும் ஜொலிக்கும் தமிழ்
சூரியனாய் சுடர் விடும் தமிழ்
நிலவாய் வசீகரிக்கும் தமிழ்
அருவியாய் கொட்டும் குளிர்த்தமிழ்
ஆறாய்வோடும் அழகுத் தமிழ்
தேரோடும் வீதியில் தெய்வத்தமிழ்
சீரோடும் பேரோடும் பிறந்த தமிழ்
ஊரோடும் உலகோடும் கலந்த தமிழ்
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், மதுரையைச் சேர்ந்தவர்)