மீனாவின் யோசனை
Nov 17, 2026,12:35 PM IST
- பா. பானுமதி
மீனா ஒரு நாள் தன் அம்மா வீட்டிற்கு சென்று வந்து கொண்டிருந்தாள். அம்மா வீடு அருகே 10 கிலோ மீட்டரில் இருப்பதால் அடிக்கடி சென்று வருவாள்; அங்கு பொருட்கள் விலை குறைவாகவும் தரமாகவும் இருக்கும். தேடித் தேடி வாங்கி கொண்டு வருவாள். பிறந்து வளர்ந்த ஊர் என்பதால் அந்த ஊரில் எங்கெங்கு என்ன கிடைக்கும் என்று அவளுக்கு தெரியும்.
அன்று ஒரு நாள் அப்படித்தான் ஊருக்கு சென்று திரும்பி கொண்டு இருந்தாள். மாலை முடிந்து இரவு தொடங்கி விட்டது. என்றாலும் இதோ அரை மணி நேரத்தில் சென்றுவிடலாம் என்ற எண்ணத்தில் பேருந்தில் ஏறி அமர்ந்து விட்டாள். கூட்டம் ரொம்ப இல்லை.
அவள் சீட்டுக்கு பின்னால் அமர்ந்திருந்த ஒருவன் மீனாவையே நோட்டமிட்டு கொண்டிருந்தான். மீனாவின் கையில் உள்ள பையும் கழுத்தில் இருந்த சங்கலியும் அவன் கண்களை உறுத்திக் கொண்டே இருந்தது. அதை கவனித்துவிட்ட மீனா என்ன செய்வது என்று யோசித்தப்படியே பயணம் செய்தாள்.
உடனே கைபேசி எடுத்து பேச ஆரம்பித்தாள் சத்தமாக. "என்னங்க! சீக்கிரம் பேருந்து நிறுத்ததிற்கு வந்து விடுங்கள். நான் வந்துவிட்டேன். என்னது போலீஸ் ஸ்டேஷனில்தான் இருக்கிறீர்களா...? எப்போதுமே டூட்டி டூட்டிதான். போதும் டியூட்டி பார்த்தது. என்னை வீட்டில் விட்டுவிட்டு பின்பு வேலைக்குப் போங்கள். சரி வந்து விடுகிறீர்களா? இன்னும் சில நிமிடங்களில் நான் இறங்கி விடுவேன்.
என்ன போலீஸ் ஸ்டேஷனுக்கு முன்னாடி இறங்கி விடவா, வேண்டாமா? சரி வைத்துவிடுகிறேன்" என்று சொல்லி வைத்துவிட்டாள். அதைக் கேட்டுக்கொண்டே இருந்த பின்னால் இருந்தவன் அரண்டுவிட்டான். என்றாலும் பார்த்துவிடுவோம் என்று பயணித்தான். பேருந்து நிறுத்தம் வந்ததும் அங்கு நின்ற ஒரு காவலரை நோக்கி வேகமாக ஓடினாள் மீனா. அவரிடம் ஏதோ பேச பின்னாலே தொடர்ந்து வந்தவன் மெதுவாக எஸ்கேப் ஆகிவிட்டான் .
மீனாவின் கணவன் போலீஸ் அல்ல என்றாலும் சமயத்தில் சமயோகிதமாக யோசித்து அன்று தப்பித்தாள்.
(பா. பானுமதி, ஆசிரியர், கவிஞர், பட்டிமன்றப் பேச்சாளர், சொற்பொழிவாளர். மதுரையைச் சேர்ந்தவர்)