விதைத்ததுதானே..!
- பா. பானுமதி
கலாவும் மாலாவும் இணை பிரியாத தோழிகள். ஒரு நாள் கடை தெருவுக்குச் சென்றார்கள். தீபாவளி சமயம் என்பதால் எல்லா கடைகளிலும் ஆபர்கள் அள்ளி தெளித்து இருந்தார்கள். முதலில் எந்த கடைக்கு போகலாம் என்று யோசித்தார்கள். துணி கடைக்கு சென்றார்கள். அங்கு வண்ண வண்ண சேலைகள் விலை குறைவாகும் நல்ல தரமாகவும் இருக்க தங்களுக்கு பிடித்தமானவை தேர்ந்தெடுத்து வாங்கிக் கொண்டார்கள்.
அப்படியே பில் கவுண்டரில் நின்று பணம் கொடுத்து வாங்கி விட்டார்கள். பின்பு பொருட்கள் வைத்திருக்கும் பாதுகாப்பு அழைக்க சென்று தாங்கள் வைத்து விட்டு போன பையை எடுக்க போகும் போது மடியில் இரண்டு டோக்கன்கள் கிடைத்தது. அந்த டோக்கன்களையும் அவர்களுடைய டோக்கன்களையும் கொடுத்து எல்லாவற்றையும் அவர்களுக்கு உரியது என்று வாங்கிக் கொண்டார்கள்.
பாதையில் கிடைத்த டோக்கன்கள் உரிய பையில் புத்தம் புது உடைகள் இருந்தது. மகிழ்ச்சியோடு அந்த உடைகளுடன் பேருந்தில் ஏறி கூட்டம் அதிகம் இருந்ததால் பயணச்சீட்டு வாங்காமலே இறங்கி விட்டார்கள். பின்பு அருகில் இருக்கும் உணவகத்திற்கு சென்று வேண்டிய உணவை சாப்பிட்டுவிட்டு பணம் தராமல் ஒருவர் பின் ஒருவராக நழுவி சென்றார்கள்.
வீட்டுக்கு சென்றவுடன் பார்த்தால் தங்களுடைய சேலைகள் வாங்கிய பைகள் பணப்பையுடன் சேர்த்து வைத்திருந்தார்கள். அதை உணவகத்தில் விட்டு வந்து விட்டார்கள் ... வீட்டுக்கு வந்த பிறகு தான் விபரீதம் தெரிந்தது. அடுத்து உணவகத்திற்கு சென்று பார்த்தல் அதுவரை அங்கு இருக்குமா என்ன...!
என்ன விதைக்கிறோமோ அதுதானே விளையும்!!
(கவிஞர் பா. பானுமதி, ஆசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர். மதுரையைச் சேர்ந்தவர்)