வீடு
- பா பானுமதி
சங்கரன் வேலை பார்க்கும் அலுவலகத்தில் இன்று ஒரே டென்ஷன்.
'டார்கெட் முடிக்கவில்லை' என மேல் அதிகாரி தாளித்துவிட்டார். அடுத்த ஆபீஸ்ல இருந்து கேள்வி கேட்டு தொலைத்து எடுத்து விட்டார்கள்.
தன்னுடைய அறைக்கு வந்தால், 'ஃபேன் ஓடவில்லை; பவர் கட்.'
ஒரு வழியாக வேலை முடித்து, சற்று நேரம் பூங்காவிற்கு சென்றால், 'அங்கு ஒரு ஜோடி 'குசுகுசு' என பேசினார். இன்னொருவர் கைபேசி வைத்துக் கொண்டு, காட்டுக் கத்தலாகக் கத்துகிறார்' போதும் என எழுந்து வந்து கோவிலுக்குப் போனால்...
ஒரே கூட்டம்... நெரிசல்.
அப்படியே வீட்டுக்கு வர பேருந்து ஏறினால், 'கூட்டமான கூட்டம் நிற்க இடம் இல்லை' அவ்வளவு நேரம் நின்று, ஒருவழியாக உட்கார்ந்தால், உடனே ஒரு பெண்மணி வந்து, "என் உடம்புக்கு முடியவில்லை எழுந்து இடம் கொடுங்கள்" என்றாள்.
இறங்கி ஷேர் ஆட்டோ பிடித்தால், அதிலும் 'தள்ளி உட்காரு... மேலே ஏறி உட்கார்... முன்னாடி உட்கார்' என்று ஆயிரம் பேச்சுகள்.
உடலும் உள்ளமும் கசகசக்க, 'நொந்து நூலாகி' வீடு வந்து சேர்ந்தேன். வீட்டுக்கு வந்தால் மனைவி, "காலை கழுவிட்டு வாங்க" என்றாள்.
'இவள் வேறு...' என்று காலைக் கழுவி வாசலில் உட்கார்ந்தால்... ஒரு கையில் காப்பியும் ஒரு தட்டில் மிக்சர் கொண்டு வந்து கொடுத்தவள்.
"தைலம் கொண்டு வரவா? கால் வலிக்கிறதா?" என்று விசாரிக்க.
"இரவு இட்லி வேணுமா? தோசை வேண்டுமா?" என்று கேட்டாள்.
அமைதியான வீடு ஆனந்தத்தின் கூடு என அப்போது தான் தெரிந்தது.
இங்கு எந்த நெருக்கடியும் இல்லை; எந்த கேள்விகளும் இல்லை, அலட்டல் அதிகாரம் எதுவும் இல்லை.
மணக்கும் காபி, பசிக்கு மிக்சர் வீடுதான் சொர்க்கமாக தெரிந்தது.
காரணம் இங்குதான் மனைவி இருக்கிறாள். எல்லாவற்றையும் அவள் பார்த்துக் கொள்வாள் என்னையும் சேர்த்து!
(கவிஞர் பா. பானுமதி, மதுரையைச் சேர்ந்தவர். ஆசிரியர், பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர், சொற்பொழிவாளர்)