எல்லாம் சமம் என்று .. புரட்சிக் கொடி பறக்கணும்!

Su.tha Arivalagan
Jul 08, 2026,12:51 PM IST

- பாரத்


கல்வியை காசோலைக்கு 

விற்பனை செய்வதும் 

கற்பை காமுகர்கள்  

வேட்டையாடி மேய்வதும்

அன்றாடம் நடக்கும் 

அவல நிலை 


படிக்கும் மாணவர்கள் 

கூலியாவதும்

உழைக்கும் பாமரனின்

வாழ்வாதாரம் கேள்வி குறியாவதும்

அங்கங்கே எதற்கு 

கட்சித் தலைவர்கள் சிலை 


உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற

பாகுபாட்டை எரிக்கணும் 




இங்கு எல்லாம் சமம் என்று 

ஒரு புரட்சி கொடி பறக்கணும் 


பெண்மைக்கு உரிய 

பாதுகாப்பு அளிக்கணும் 


மீறும் காமுகர்களை

சிரம் கொய்து எடுக்கணும்  


வெள்ளையன்ஆண்ட போதும்

அடிமைப்பட்டு இருந்தோம் 


மன்னர் ஆட்சியிலும்

அதனையே கொண்டோம்


பாரத அரசு ஆட்சியிலும் 

இதுவே நிரந்தரம் 


என்னைப் போல ஏழைகளுக்கு 

எப்போது சுதந்திரம்